Monday, 12 May 2014

‘எல்லை’!



‘எல்லை’!
எல்லையில் காவல் நிற்குமவள்
பாரதத் தாயின் செல்ல மகள்!
பெற்ற தாயைப் பேணிட வேண்டி
பிறந்த நாட்டினை காக்கும் பணி!
நிர்மலக் கண்ணில் மின்னும் வீரம்!
அன்னை விழியோரம் ஆனந்த ஈரம்!
‘காத்து’ நிற்பதோ இந்திய எல்லை
நித்திய ‘கண்டம்’-பயம் ஏதுமில்லை!
காக்கி அணிந்த ஜான்ஸி ராணி…
ஏதேனும் பிறவியில் – என்
மகளாய் வா - நீ!
ரவிஜி….
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(தேசத்தைக் காத்து நிற்கும் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும்)
(எனது இடுகைகளை வாசித்து கருத்தளித்து ஊக்கமளித்து வரும் அன்பு உள்ளங்கள் அனைத்திற்கும் எனது நன்றியுடன் ... இது 100ஆம் இடுகை)

9 comments:

  1. //ஏதேனும் பிறவியில் – என் மகளாய் வா - நீ!//

    என்ன துணிச்சல் !

    ‘எல்லை’யில்லாத் துணிச்சல் !!

    படமும் ஆக்கமும் அருமையோ அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் ஐயா!

      Delete
  2. //காத்து’ நிற்பதோ இந்திய எல்லை
    நித்திய ‘கண்டம்’-பயம் ஏதுமில்லை!
    /இவர்கள் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியவர்கள்! 100ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வணக்கம்
    நாட்டைகாவல்காக்கும் காவல் வீராங்கனைகள்...
    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கண்டிப்பாக உங்கள் ஆசை நிறைவேறும்.
    தங்களின் 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    இந்த 100வது பதிவு ஒரு முத்தாய்ப்பான ஒரு பதிவு தான்.

    ReplyDelete
  5. 100-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    உங்கள் ஆசை நிறைவேறட்டும்.

    ReplyDelete
  6. 100 வது சீக்கிரமே 1000 த்தைதொட எமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
    அன்புடன் Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! முதன் முதலாய் வரும்பொழுதே 1000 தொட வாழ்த்துடன் வருகைபுரிந்த தங்களுக்கு எனது நன்றி! நன்றி!

      Delete