நீ(ள)ல வானம்!
எல்லைகள் ஏதுமற்று
பரந்து விரிந்திருக்கும்
நிர்மல நீல வானம்.
மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
மிதந்தபடி செல்லும்
வெண்பஞ்சு மேகம்!
கீழிருந்து ஒரு தோற்றம்
மேலிருந்து மறு தோற்றம்.
இக்கணம் வரும் மே(வே)கம்
மறுகணம் க(ந)டந்து போகும்.
பகலென்றால் சூரியனும்;
இரவென்றால் சந்திரனும்.
ஒன்றோடு ஒன்றும்-
சேர்வதில்லை என்றும்.
இரவினிலே ஒளிரும்
பகலினிலோ ஒளியும்
வேற்றுலகச் சூரியனாம்
மின்னும் நட்சத்திரம்.
ப(இ)னிக்கும் தூறலுண்டு
இடியும் இடிக்குமிங்கு.
எல்லாம் கல(லை)ந்திருக்கும்
நீல(ள)வானம் என்னிதயம்!
ரவிஜி...
(பட உதவி : நன்றி கூகிள்)