தீபாவளி 2015 ஒட்டி
ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்தினால்
நடத்தப்பட்ட உலகளாவிய படத்துக்கான கவிதைப்போட்டியில்
இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
பரிசு அறிவிற்பிற்கான இணைப்பு இதோ!
நூ(ஊ)று ரூபாய் நோட்டு…!!!
மொழிகளின் பேதம் எதுவுமில்லை;
இல்லாத நாடுகள் எங்குமில்லை!
வார்த்தைக்கு இங்கு மதிப்பில்லை;
‘எண்ணம்’ மட்டும் மதிக்கப்பெறும்!
வியர்வையின் ஈரம் பார்த்ததுண்டு;
ரத்தத்தின் கோரம் சுவைத்ததுண்டு!
‘இதயங்’களின் அருகில் இடமுண்டு;
எ(ம)வனையும் (ஏ)மாற்ற திறமுண்டு!
எட்டாத உயரமென யாதுமில்லை;
இதனை விரும்பாது எவருமில்லை!
குழந்தையும் வீசும் குப்பைத்தொட்டி-
இதுவரை காண வாய்க்கவில்லை!
பிணமும் வாய் திறக்கச்செய்யும்-
பணம் - பத்தும்கூட செய்துவிடும்;
இப்பணம் - ‘நூ(ஊ)று’ம் செய்யக்கூடும்!
எம்.ஜி.ஆர்.
(வாய்ப்பளித்த ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்திற்கும், பரிசுக்குத் தெரிவு செய்த நடுவர்களுக்கும் நன்றி)
(வாய்ப்பளித்த ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்திற்கும், பரிசுக்குத் தெரிவு செய்த நடுவர்களுக்கும் நன்றி)