சம(ன்) பந்தி போஜனம்!
அகத்தே புற உலகம் குறித்து
உரத்த சிந்தனை ஏதுமில்லை!
தீராது பசித்தாலும் - உயிர்களை
ஒதுக்கும் நிந்தனை, பேதமில்லை;
உலகத்தில் உயிர்கள் எல்லாம்
உணர்வினால் சமமே என்று
செயலாலே விளங்கச் செய்யும்
இவன் கடவுளன்றி வேறில்லை!
ரவிஜி…!
(புகைப்பட உதவி: வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பூ)
(படத்தின் முன்பாக வார்த்தைகள் தோற்றுப் போகின்றன நண்பரே)