Friday 4 August 2017

அக்க(றை)ரை!

அக்க(றை)ரை!
நல்லதென உனக்கு - நான்
சொல்லும் சமயமெல்லாம்
நீ அதை செய்தாயா – என்று
என் சொற்களை எதிர்மறுத்து
இளக்கரிக்கும் என் மகனே…,
தொட்டால் சுடும் நெருப்பு;
பட்டால் வெட்டும் கத்தி;
வாயால் ப()ழிக்கும் பேச்சு!
சொன்னால் புரிந்து கொள்…
இல்லை நீயாக அறிந்துகொள்..
நானுனக்கு சொல்வதெல்லாம்
காலத்தால் உணர்ந்த உண்மை.
பயிற்சி அளிப்போரெல்லாம்
சாதித்திருக்க அவசியமில்லை
சொல்வது – அறிவுரையல்ல;
பெற்ற மகனென்ற - அக்கறை.
ரவிஜி…
(பட உதவி - நன்றி கூகிள்)