Wednesday 7 June 2023

 2

DHARUN BABU + JEYASREE
தருண் @ தருண்

இளமை மென்மை நிதானம் சூரியன் பிரகாசம்

மகிழ்ச்சி முனைப்பு நற்பேறு பிரம்மா சொர்கம்


பொருள்கள் பலவாகும் பெயரோ ஒன்றாகும்

அழகன் முருகனை தருணையே அவை குறிக்கும்


ராஜா இவனெனினும் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை

ரோஜா மலரெனவே பூமிக்கு அவன் வந்தான்


தென்னரசி என்கின்ற பெண்ணரசி பெற்ற மகன்

தந்தை குலசேகரன் கூர்தீட்ட அவன் வளர்ந்தான்


நடைபழகும் பருவத்தே அவன் கையில் காமிரா

குறும்புப் பார்வையோ புன்னகைக்கும் ஏமிரா


பள்ளிப் பருவத்தே எம்முடன் வந்திணைந்தான்

நரம்பும் சதையுமாய் பின்னிப் பிணைந்திருந்தான்


பெற்றோராய் எங்களை அன்றே வரித்துக் கொண்டான்

இதயங்களை மலரென முழுதாய் பறித்துக்கொண்டான்


அக்காவின் கொஞ்சலிலே அவனது அகம் மலரும்

அக்-காவின் இதயத்தில் நிலையான இடமிருக்கும்


தங்கைகள் கண்டால் பாசமழை பொழிந்திடுவான்

மெழுகாய் உருகிடுவான் பாகாய் இளகிடுவான்


தம்பிகள் இவனுக்கு இணையில்லா நண்பர்கள்

குசும்புடன் வம்பிழுக்கும் ஆருயிர் வம்பர்கள்


சித்திகளின் பாசமென்றும் வற்றா நதியாகும்

பற்றை அனுமதியான் வட்டியுடன் திரும்பிவிடும்


துயரினில் வழியும் எவர் விழியும் துடைப்பான்

துன்பம் தொடராது வழியையும் அடைப்பான்


கொக்கொக்கக் காத்திருப்பான் குத்தொக்கும் வெற்றிக்கு

எத்திக்கும் எதிர்கொள்வான் உச்சத்தைத் தொட்டிடவே


மென்பொருள் துறையினிலே அவனோர் விற்பன்னன்

அக்கறை செலுத்துவதில் ஈடில்லா மாமன்னன்


தலை நிமிரச் செய்தது தளராத நம்பிக்கை

தலைக்கனம் காட்டாது அவனது நடவடிக்கை


வைரமென மின்னும் மணமகனாய் தருண் பாபு

வைரத்தைப் பதிக்கும் பதக்கமானாள் ஜெயஶ்ரீ


ஆல்போல் வேரூன்றி அருகாய்த் தழைத்திருக்க

வாழ்த்துச் சொன்னாலோ நானோர் கற்காலம்


வலைத்தளமாய் விரிந்து செல்கோபுரமென வளர்ந்து

வாழ்வாங்கு வாழ்ந்திருக்க வாழ்த்திடுவோம் இக்காலம்


என்றென்றும் அன்புடன்,

ரவிஜி...Tuesday 21 March 2023

கஸல்உந்தன் நிழலோ
என்னை விழுங்குகிறது
நேரில் விழிகளோ 
பொய்யாய்ச் சுடுகிறது
ரவிஜி...
(பட உதவி: நன்றி கூகிள்)

Tuesday 30 June 2020

‘ஞாயிறி’ன் ஞாயிறு…!     ‘கவிஞர் கணக்காயன்’ என்று அவருடன் கவியரங்கங்களில் ஒரே மெடையில் பங்கு பெற்ற ஆகப் பெரிய கவிஞர்களான கவியரசு. கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிஞரும் முன்னாள் அமைச்சருமான வேழ வேந்தன் மற்றும் பலராலும் என்னைப்போன்ற சில துக்கடாக்களாலும் அறியப்பட்ட, அனைவரின் அன்பைப் பெற்ற கவிஞர் திரு. இ.சே. இராமன் அவர்கள் ஆயிரம் பிறைகண்ட பின்னர் தான் எழுதிய, தனக்கு எழுதப்பட்ட கவிதைகளை ஒரு தொகுப்பாக “கணக்காயன் கவிதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பிரதியை தன் கையொப்பமிட்டு எனக்கு அன்புடன் அளித்தார். அவர் தொகுத்துள்ள 251 கவிதைகளில் நான் எனது மனந்தோன்றியபடி அவரின் 70ம் அகவையின் போது சந்திக்க வாய்த்த சமயத்தில் எழுதிக்கொடுத்த கவிதை(..?)க்கு 17ம் கவிதையாக இடமளித்து (தன் இதயத்திலும் இடம் கொடுத்ததைப்போல) கெளரவப்படுத்தியுள்ளார்.
     எதையுமே கவித்துவத்துடன், எதுகை மோனையுடன், நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவது இவரின் பெரும் சிறப்பு. நிறையவே எழுதுமாறு சற்றே சொம்பேறியான என்னையும்கூட ஊக்குவித்து வருபவர். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான இவர், தமிழக முன்னாள் முதல்வரான திரு. மு. கருணாநிதி அவர்களின் மாபெரும் ரசிகர். நானும், கவிஞர் கணக்காயன் அவர்களின் மாப்பிள்ளையான திரு. ஈ.சீ. சேஷாத்திரி அவர்களும் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள். திரு.எம்.ஜி.ஆர் மற்றும் திரு. கருணாநிதி அவர்களிடையே நிலவிய ஆழ்ந்த நட்பைப்போலவே எங்களின் நட்பும் அமைந்தது. தனது மகன்கள் மற்றும் மகள்கள் அனைவருக்கும் தூய தமிழ்ப் பெயர்களையே வைத்துள்ளார். பேசும்பொழுது பிற மொழிக்கலப்பின்றிப் பேசுவது இவரின் மற்றொரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அதிலும் எதுகை-மோனை இருக்கும்.  பொடி போடுபவர்கள் தான் நன்றாக பொடியை உறிஞ்சி, தும்மலின்றி கையை உதற மற்றவர்கள் தும்மல் போடுவார்கள். அதுபோல இவரும் ஒரு நகைச்சுவையை சர்வசாதரணமாக சொல்லிவிட்டு கேட்பவர்கள் சில வினாடிகள் சிந்தித்து, சிரிக்க இடம் கொடுத்து பின்னர் தானும் சேர்ந்து சிரித்து மகிழ்வது இவருக்கு வழக்கமான ஒன்று. இன்னும் இவரிடம் இயல்பான குழந்தைத்தனமும், குதூகலமும் தொற்றிக்கொண்டிருக்கக் காரணம், இவரின் வாழ்க்கைத் துணையாய் அமையப்பெற்ற திருமதி. அர. வனஜாமணி அவர்கள்தான் என்றால் அது கொஞ்சமும் மிகையில்லை. அவர்களும் ஓய்வுபெற்ற ஆசிரியை என்பது கூடுதல் சிறப்பு. இதற்குதான் என்றல்லாது எதற்கும், எவர்க்கும் கவிதை படைத்துவிடும் பெருந்தன்மை இருப்பதனால் இவரின் படைப்புகள் ஏராளம்-ஏராளம். இந்த முதல் தொகுப்பு ஒரு ஷோ-கேஸ்தான். இன்னும் குடவுன் அளவுக்கு இவரிடம் மீதமிருக்கும் கவிதைகள் நிறைய உண்டு. தனது 90ல் ஒன்றும் 100ம் அகவையில் ஒன்றும் என இவர்மேலும் கவிதைத் தொகுதிகள் வெளியிடுவது தொடரவேண்டுமென்பது எனது வேணவா. எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள் கவிஞர் திரு. கணக்காயன் அவர்களே.
என்றென்றும் அன்புடன்...
விஜி
(ஒரு முறை இவர் சென்னையிலிருந்து புதுவை வந்த மறுநாள் காலை என்னை அலைபேசியில் அழைத்தபோது ஞாயிறான அன்று நான் தூக்கக் கலக்கத்தில் எதையோ சொல்லிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். ஞாயிறு காலை ஆறரை என்பது எனக்கு நடு ராத்திரி அல்லவா.       கண்விழித்ததும் வடிவேலு பாணியில…ஆஹா..என்று எண்ணி இதனைக் கிறுக்கி, அலைபேசியில் அழைத்துப் படித்தேன்.  மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக பழைய நாட்குறிப்பில் கிடைத்த இதை இன்று இவரது கவிதைத் தொகுப்பு பற்றிய குறிப்புடன்
வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறேன்.)ஞாயிறி’ன் ஞாயிறு…!
ஞாயிறும் ஓய்வெடுக்கும் ஓர் ஞாயிறில்,
திங்கள் உலவும் நேரந்தான் எனக்கு.
ஞாலம் விழிக்கத் துவங்கி – என்னில்
ஞானம் இன்னும் துயிலெழாத நேரம்;
சிணுங்கத் துவங்கும் என் செல்பேசி.
ஞாயிறை அணைத்திருந்த நித்ராதேவி
“யாரிந்த வேளையில் – ராவணன்..?”என,
செல்லிடப் பேசியோ(ர்) செல்லக் குரலில்-
“நான் உங்களின் நலம் விரும்பும்,
பண்ணேற்றிவரும் பொன்னேரி ராமன்” என,
நித்திரை போதாதென விழித்திரை கெஞ்ச;
‘வா’வென மீண்டும் நித்திரா அழைத்துக்கொஞ்ச:
ஆதவனோ அவ்வணைப்பில் வீழ்ந்தான் துஞ்ச!
ஞாயிறின் ஞாலம் மீண்டு(ம்) விழித்தது;
இரவி’யின் விடியலில் கவிதை பழித்தது:
“நலம் நலமறிய ஆவல் கணக்காயரே…
நீவிர் ஆகிடவேண்டாம் பிணக்காயரே” என.
விஜிTuesday 12 November 2019

மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: சு(ப)யம்…!

மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: சு(ப)யம்…!: Why should I seek more? I am the same as he. His essence speaks through me. I have been looking for myself.   Rumi...

சு(ப)யம்…!

Why should I seek more?
I am the same as he.
His essence speaks through me.
I have been looking for myself. 
Rumi..
சு()யம்…!
நான் எதற்கு இன்னும்-
தேடலில் உழல வேண்டும்?
நானே- உண்மையில் அவன்!
...
அவனின் எண்ணச் சாரம்;
அதற்கும் நானே சாளரம்!
நிஜத்தில் நான் தேடுவது-
த()ட்டுப்படாத என் சு()யம்…!
விஜி
Saturday 24 November 2018

முக(ம்)மூடிகள்…!?

முக(ம்)மூடிகள்…!?
ஒருவர் பின்னே மற்றவர் என
மா(ற்)றி மா(ற்)றி என் முதத்தில்
அணிவிக்கும் பல நி(தி)ற முகமூடிகள்.
உண்மை முகம் அறியத்தரவென்று-
அணிவித்தவற்றை  நான் கழற்ற,
ஒவ்வொரு அடுக்கிலும் வெவ்வேறான-
முகம்போல் முகமூடிகள் காட்டும்!
ஒரிரு மூடிகள் கழற்றும் முன்பே
புதியதாய் சில - என் முகம் மூ(வா)டும்.
முடிவற்றதாய் அணிவிப்புகள் நீளவே,
முகம் தாண்டி – மனம் உணர்ந்தாலன்றி
என் உண்மை முகம் அறியாதேபோகும்.
பிறர் போட்ட மூடி உண்மை என்றெண்ணும்
உண்மை முகமறிய விருப்பம் இல்லார்க்கு
திருப்(ம்)பி  முகங்காட்ட வ()ந்திடுமோ
என் மனதுக்கொரு வி(தி)ருப்பம்?
விஜி…
(பட உதவி - நன்றி கூகிள்)

Tuesday 21 November 2017

நீ(ள)ல வானம்!நீ()ல வானம்!
எல்லைகள் ஏதுமற்று
பரந்து விரிந்திருக்கும்
நிர்மல நீல வானம்.
மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
மிதந்தபடி செல்லும்
வெண்பஞ்சு மேகம்!
கீழிருந்து ஒரு தோற்றம்
மேலிருந்து மறு தோற்றம்.
இக்கணம் வரும் மே(வே)கம்
மறுகணம் க()டந்து போகும்.
பகலென்றால் சூரியனும்;
இரவென்றால் சந்திரனும்.
ஒன்றோடு ஒன்றும்-
சேர்வதில்லை என்றும்.
இரவினிலே ஒளிரும்
பகலினிலோ ஒளியும்
வேற்றுலகச் சூரியனாம்
மின்னும் நட்சத்திரம்.
ப()னிக்கும் தூறலுண்டு
இடியும் இடிக்குமிங்கு.
எல்லாம் கல(லை)ந்திருக்கும்
நீல()வானம் என்னிதயம்!
விஜி...
(பட உதவி : நன்றி கூகிள்)