முக(ம்)மூடிகள்…!?
ஒருவர் பின்னே மற்றவர் என
மா(ற்)றி
மா(ற்)றி என் முதத்தில்
அணிவிக்கும் பல நி(தி)ற
முகமூடிகள்.
உண்மை முகம் அறியத்தரவென்று-
அணிவித்தவற்றை நான் கழற்ற,
ஒவ்வொரு அடுக்கிலும் வெவ்வேறான-
முகம்போல் முகமூடிகள் காட்டும்!
ஒரிரு மூடிகள் கழற்றும் முன்பே
புதியதாய் சில - என் முகம் மூ(வா)டும்.
முடிவற்றதாய் அணிவிப்புகள் நீளவே,
முகம் தாண்டி – மனம் உணர்ந்தாலன்றி
என் உண்மை முகம் அறியாதேபோகும்.
பிறர் போட்ட மூடி உண்மை என்றெண்ணும்
உண்மை முகமறிய விருப்பம் இல்லார்க்கு
திருப்(ம்)பி
முகங்காட்ட வ(த)ந்திடுமோ
என் மனதுக்கொரு வி(தி)ருப்பம்?
ரவிஜி…
(பட உதவி - நன்றி கூகிள்)