இடமாறு(ம்) தோற்றப்பிழை…!
ஜன்னலோரத்து இருக்கையில்
ரசிக்கும் பயணியாய் நான்.
பிரிக்கும் கம்பிகளின் ஊடாக
கையழுத்தி… கையசைத்து…
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
‘விடை’ பெற்றுச்சென்ற நீ…
ஓடும் ரயிலின் எதிர்திசையில்
இடமாறு தோற்றப் பிழையென
விரைந்து மறை(ற)ந்த ம(ன)ரங்கள்.
நிறம் மாறும் மனிதர்களை
தினம் சுமந்து தடம் பிடித்து-
தினமும் ஓடிடும் புகைவண்டி;
மனம் மாறா என் நிலையோ
போக்கற்று தாளாது தள்ளாடும்
வாழ்க்கை ‘விடை’ வேண்டி..!
ரவிஜி…
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)
படங்கள் அருமை... தங்களின் வரிகள் அதை விட...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
தங்களின் வருகைக்கும் கருத்து தெரிவிற்கும்...நன்றி ஐயா!
Deleteஅருமையான படங்கள். அதற்கேற்ற கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா...!
Delete