Showing posts with label இதயம். Show all posts
Showing posts with label இதயம். Show all posts

Tuesday, 21 November 2017

நீ(ள)ல வானம்!



நீ(ள)ல வானம்!
எல்லைகள் ஏதுமற்று
பரந்து விரிந்திருக்கும்
நிர்மல நீல வானம்.
மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
மிதந்தபடி செல்லும்
வெண்பஞ்சு மேகம்!
கீழிருந்து ஒரு தோற்றம்
மேலிருந்து மறு தோற்றம்.
இக்கணம் வரும் மே(வே)கம்
மறுகணம் க(ந)டந்து போகும்.
பகலென்றால் சூரியனும்;
இரவென்றால் சந்திரனும்.
ஒன்றோடு ஒன்றும்-
சேர்வதில்லை என்றும்.
இரவினிலே ஒளிரும்
பகலினிலோ ஒளியும்
வேற்றுலகச் சூரியனாம்
மின்னும் நட்சத்திரம்.
ப(இ)னிக்கும் தூறலுண்டு
இடியும் இடிக்குமிங்கு.
எல்லாம் கல(லை)ந்திருக்கும்
நீல(ள)வானம் என்னிதயம்!
ரவிஜி...
(பட உதவி : நன்றி கூகிள்)

Wednesday, 1 April 2015

ஆ(க்)கச் சிறந்த கவிதை!


ஆ(க்)கச் சிறந்த கவிதை!
கண்ணுறும் பல காட்சிகள்
செவிமடுக்கும் சில வார்த்தைகள்
என் இதயத்தின் உள்ளோடி-
வரிகளாய் வடிவம் கொள்ளும்!
காலங்கள் கொஞ்(சு)சம் கடந்து
மீண்டும் நான் (சு)வாசித்திட-
வார்த்தைகள் மாற்றம் வேண்டும்!
வந்து விழுந்த வார்த்தைகள்-
மாற்ற(ப்)ம் பெற்ற எழுத்துகள்
எது மேலென அறிவு கேட்கும்.
“ஆ(க்)கச் சிறந்த கவிவரிகள்
இனிதான் நீ எழுத வேண்டும்”
இளக்கரிக்கும் - என் இதயம்!
ரவிஜி…
(பட உதவி: நன்றி கூகிள்)