ஆ(க்)கச் சிறந்த கவிதை!
கண்ணுறும் பல காட்சிகள்
செவிமடுக்கும் சில வார்த்தைகள்
என் இதயத்தின் உள்ளோடி-
வரிகளாய் வடிவம் கொள்ளும்!
காலங்கள் கொஞ்(சு)சம்
கடந்து
மீண்டும் நான் (சு)வாசித்திட-
வார்த்தைகள் மாற்றம் வேண்டும்!
வந்து விழுந்த வார்த்தைகள்-
மாற்ற(ப்)ம்
பெற்ற எழுத்துகள்
எது மேலென அறிவு கேட்கும்.
“ஆ(க்)கச்
சிறந்த கவிவரிகள்
இனிதான் நீ எழுத வேண்டும்”
இளக்கரிக்கும் - என் இதயம்!
ரவிஜி…
(பட உதவி: நன்றி கூகிள்)

