VGK அவர்களின் ‘ஜாதிப்பூ’சிறுகதை விமர்சனப் போட்டியில் சரிசமமான பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK
16 – ‘ஜாதிப்பூ’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
சரிசமமான
பரிசு
கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இது
நான் பெறும் நான்காவது தொடர் பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது
விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு
செய்த
நடுவர்
ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!
‘ஜாதிப்பூ’ சிறுகதைக்கான இணைப்பு:
சம பரிசுபெற்றதனை அறிவிக்கும் இணைப்பு:
விமர்சனம்
வெளியிடப்பட்டுள்ள இணைப்பு:
கதைக்கான எனது விமர்சனம்
இதோ:
“ பூக்களை விட…
அந்தப்பூக்காரி… நல்ல அழகு!பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்” என்று கதை ஒரு ‘யூத் டச்’ உடன்
ஒரு சினிமாவின் துவக்கக் காட்சி போல் ஆரம்பிக்கிறது. பூக்களே அழகு. அதிலும் பூ
விற்கும் அழகிய பெண்ணென்றால்…!
பூ வியாபரத்திற் கேற்றவாறு இரட்டைப் பின்னல்கள். பாவாடை சட்டை தாவணி. பளிச்சென்ற தோற்றம். படித்த பெண்ணாக தோற்றமளிக்கும் இவள் பூ வியாபாரத்திற்கு புதியவளா என்ற ஒரு கேள்விக் குறி!
பூ வியாபரத்திற் கேற்றவாறு இரட்டைப் பின்னல்கள். பாவாடை சட்டை தாவணி. பளிச்சென்ற தோற்றம். படித்த பெண்ணாக தோற்றமளிக்கும் இவள் பூ வியாபாரத்திற்கு புதியவளா என்ற ஒரு கேள்விக் குறி!
அந்தக்கோயில் வாசலில் ஏற்கனவே பூ விற்றுவந்த கிழவியின் வியாபாரம்இந்தப் புதுப் பெண்ணின்வருகையால் கடந்த ஒருவார காலமாகப்படுத்துப் போனது. அழகான பெண் என்றால் பூ
வாங்க கூட்டம் வருவதும், பக்தி வேடமிட்டாவது அவளைக் கவர்ந்திட நினைப்பதும்
சகஜமென்றாலும் தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால் வழிசல் பேர்வழிகளையும்,
ஜொள்ளர்களையும் சாமர்த்தியமாக சமாளித்து முழுகவனத்தையும் செலுத்தி பூக்கூடையைக் காலி
செய்துவிட்டு, கை நிறைய காசுடன் ‘வரட்டுமா பாட்டி?’ என்று கேட்டுச் செல்கிறாள்!
அந்த பூ வியாபாரத்திற்கு
சீனியரான பாட்டியோ கோபம் ஏதுமின்றி, போட்டியோ அல்லது பொறாமையோ கூட இல்லாது, ”ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்கிறாள் வாஞ்சையுடன்! ஏன்?
இந்த இடத்தில், அந்த இளம் பெண் யார், பாட்டிக்கு
என்ன உறவு என்று கீற்றாக ஒரு சந்தேகம் கலந்த கேள்வி வாசகனுக்கு எழுகிறது!
அந்தப்பெண் யார், அவள் பெயரென்ன, எந்த ஊர், எங்கே தங்கி இருக்கிறாள்
என்று பலரும் எழுப்பும் சந்தேகத்திற்கு, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்தவள்,
வேறொன்றும் தெரியாது! இனிமேல் அது வெள்ளி செவ்வாய் மட்டும்தான் வருமாம்!’ என்று
சொல்லி ஜொள்ளர்களின் சூடான நெஞ்சங்களில் தண்ணீரை ஊற்றி
அணைக்கிறாள்! அவளுக்கென்ன அக்கறை?
மற்றவர்களெல்லாம், பேசாமல்
சென்றுவிட அந்த இளைஞன் மட்டும் கிழவியின் காதில் ”செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு
வரவேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்று சொல்கிறான். அந்தப்பெண்மீது அவனுக்கென்ன
அக்கறை? இதை ரகசியமாகச் சொல்லுமளவிற்கு, பூக்கார பாட்டியுடன் என்ன உறவு? இவ்வாறு அடுத்தடுத்த
கேள்விகளை எழுப்பிவிட்டு, அவற்றுக்கு பதில் சொல்வதுபோல் கதை நகர்கிறது! பல வண்ணப்பூக்களை ஒரு நூலோ
அல்லது நாரோ இணைப்பதனைப்போல சின்னச் சின்ன வண்ணமயமான காட்சிகளை திரைக்கதை பாணியில்
கோர்த்துச் சென்றிருப்பது அருமையான உத்தி!
அந்த இளைஞன் உண்மையிலேயே
கடவுள் பக்தி உள்ளவன்; தினம் தவறாமல் கோயிலுக்கு வருபவன்; கிழவிக்கு அவனது
சின்னவயது முதலாகவே பழக்கமுண்டு என்பதும் அவனை அவள் ‘பேராண்டி’ என்று செல்லமாக
அழைக்கும் அளவிற்கு பழக்கமென்பதும் முதலில் கோடிட்டுக்காட்டப் படுகிறது. பூக்காரக் கிழவி உடல்
நலமின்றி இருந்த பொழுது, மழையில் நனையாமல் குடையுடன் பத்திரமாக வீட்டிற்குக்
கொண்டு போய்விட்டது இங்கே தெரியப்படுத்தப்படுகிறது. தள்ளாத வயதிலும் பூவிற்று தன்
உழைப்பில் உயிர்வாழும் கிழவிமேல் அவனுக்கு ஒரு தனி பிரியம். கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப் போகும்முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசி விட்டுத் தான் போவான்.
அந்த நட்புறவு அவனது
சிறுவயதில் பூக்களின் பெயர்களைத் தெரிந்துகொள்வதில் துவங்கி வளர்ந்தது! பூக்களிலே ‘ஜாதிப்பூ’ என்ற ஒன்று இருப்பதை
அறிந்து ‘பூக்களிலும் தனியாக ஒரு ஜாதியா?’ என்று கேள்வியெழுப்புவதான அவனது
பாத்திரப்படைப்பு அவனுக்கு ஜாதி வித்யாசங்கள் சிறுவயதிலிருந்தே இல்லை என்பதனை
அறிவுறுத்துகிறது! அவன் பள்ளியில் முதல் ரேங்க் வாங்கியது, கல்லூரியில் படித்து உள்ளூர்
பேங்க் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிவது வரை அவ்வப்பொழுது பகிர்ந்துகொண்டு
பாட்டியின் வாழ்த்துக்களையும் பெற்று வந்துள்ளான். இவை எல்லாமே
பாட்டிக்கும் ‘பேரனு’க்கும் உள்ள ஆழ்ந்த நட்புணர்வினை தெளிவுபடக் கூறுவதாக
இருக்கிறது.
ஜாதி வித்தியாசம் பார்க்க
விரும்பாத அந்தப்பையன் தான் பெண் வீட்டிற்கு எந்த செலவும் வைக்காமல் திருமணம்
செய்துகொள்ள விரும்பிடும் அந்த இளம் பூக்கார அழகுப்பெண்ணை பொது இடத்தில் மற்றவர்
பார்த்து ஜொள்ளு விடுவதை சகியாமல் பாட்டியிடம் விருப்பத்தைத் தெரிவித்து அது
நிறைவேற அசீர்வதிக்கும்படியாக வேண்டுகிறான். பாட்டியிடம் வேண்டியது
அம்பாளிடமே வேண்டியதுபோல நல்ல சகுனமாய் கோயில் மணிஅடித்து அட்வான்ஸ்
வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
இங்கே ஒட்டுமொத்த
கதைசுருக்கமும் ஏறக்குறைய தரப்பட்டுவிடுகிறது. உயர்நிலைப் பள்ளிப்படிப்புத் தேர்வு முடிந்து, லீவுக்கு பூக்காரப்பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ள பேத்தி, ஜாலிக்காக அவளுக்கே
போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதோடு தான் யார் என்பதை எவருக்கும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டிருக்கிறாள்!
அதன்பிறகான பிளாஷ்பேக்
நிகழ்வே இதுவரையிலான கதை!
பழம் நழுவிப் பாலில்
விழுவதைப்போல, நன்றாகப் படித்து, நல்ல வேலையிலுள்ள, பாசத்தோடு, கடவுள் பக்தியோடு,
நற்குணங்களும் பொருந்திய, சிறுவயதுமுதலே தான் நன்கு அறிந்த பையனே விளையாட்டாக
பூவிற்க வந்த தனது பேத்திக்கு பூச்சூடி மணமகளாக ஆக்கிக்கொள்ள விரும்புவதை
அம்பாளின் அனுக்கிரஹமாகவே எண்ணி சந்தோஷத்தில் பூரித்து பூத்துக் குலுங்குகிறாள்
பூக்கார பாட்டி!
அந்த அம்பாளே பேசுவதுபோல
தனது முடிவாக சஸ்பென்ஸையும் உடைப்பதுபோல “எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா ‘மாப்ளே’ என்கிறாள் அந்தப்பாட்டி. அப்பொழுதே தனது பேத்தியை
அவனுக்குக் கட்டிவைக்க முடிவு செய்திருப்பதனை மறைமுகமாகத் தெரிவிக்கிறாள்.
முதலில் நல்ல சகுனமென
ஒலித்த கோயில் மணி, பாட்டி ‘மாப்ளே’ என்றழைக்கும்பொழுது சிம்பாலிக்காக மேளதாள’த்துடன் கோயில்மணி
ஒலிக்கிறது. பாட்டியாக மனோரமா ஆச்சி, ‘பேத்தி’யாக தமன்னா,
‘பேரனாக’ இருந்து மாப்பிள்ளையாக இருக்கும் பாத்திரத்தில் சூர்யா என்பதான ஒரு
காட்சி நமது மனக்கண்ணில் விரிகிறது.
மணக்கும் ‘ஜாதிப்பூ’ விற்கும் அவனது
மனங்கவர்ந்த அழகிய பெண்ணேயே அவன் மணந்து ‘பெண்ஜாதி’ஆகும் குறியீடான
சுபநிகழ்வுடன்…’சுபம்’. எளிமையே வலிமை என்பதுபோல் அருமையான எளிமையான நடை! கதை
முழுவதுமே இழையோடும் ஒரு பாஸிடிவ் அப்ரோச் வாசிக்கும் நமக்கு ‘சுகம்’. “திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன” என்பார்கள்! இங்கோ சொர்கத்தின் வாசலான கோயில் ஒன்றின் வாசலில் நிச்சயிக்கப்படுகிறது! ‘பேத்தி’யும்
‘மாப்பிள்ளையும்’ பேசுவது போன்ற சிறிய நிகழ்வு ஏதாவது ஒரு இடத்தில்
அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! ‘புதுமணமக்கள்’ நீடூடி வாழ அந்த அம்பாள் அனுக்ரஹம் பெற
நாமும் வேண்டுவோம்!
நன்றி!
உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஏற்கனவே ஹாட்-ட்ரிக் பரிசுக்குத் தேர்வாகியுள்ள தாங்கள் நான்காம் சுற்றிலும் முன்னனி வேட்பாளராகத் திகழ்வது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் போட்டியில் தங்களின் மீண்டும் வெற்றியை தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.
மேலும் மேலும் தொடர்ந்து இதே போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் மேலும் பல்வேறு பரிசுகள் வென்றிட என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
அன்புள்ள VGK
மிகவும் நன்றி ஐயா!
Delete//மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் VGK 15 – ‘ஜாதிப்பூ’ சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு சரிசமமான பரிசு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! //
ReplyDeleteஇதில் VGK 15 – ‘ஜாதிப்பூ’ என்பது தவறு.
என் அறிமுகமான பூக்காரி ஸ்வீட் சிக்ஸ்டீன் அல்லவா !
அதனால் VGK-16 என அதனைத் திருத்தி விடவும்.
அன்புடன் VGK
15ம் கூட ஸ்வீட்தானே! ஆனாலும் தவறை சரியாக ஸ்வீட் 16 என்றே திருத்திவிட்டேன்! மிகவும் நன்றி ஐயா! அன்புடன் mgr
Deleteதொடர்ந்து பரிசுகள் வென்றதற்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteமிகவும் நன்றி! தங்களின் தொடர்வெற்றிக்கும் வெற்றிகள் மேலும் தொடரவும் எனது வாழ்த்துகள்!
Deleteதொடர்ந்து மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்...விமர்சனம் திரு வை.கோ. அவர்கள் தளத்திலேயே படித்து விட்டேன்.....
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
Delete