‘கடந்த’ காலம்!
இரு கரை தொட்டு ஓடியிருந்த
கவினுறு காவிரி ஆறு
தரை தட்டி காய்ந்ததென்ன!?
சுழித்தோடிய ஆற்றினூடே
கோபுரமேறி குதித்த தடம்;
இன்றோ காய்ந்து போன-
ஒரு கிரிக்கெட் மைதானம்!
காலங்கள் பல கடந்தும்
ஊர் செழிக்க ஓடியிருந்தது….
இன்றோ உலரும் நிலைவந்து-
‘கடந்த காலம்’ ஆகிப்போனது!
இளைஞர் மனம் மகிழ இங்கே
கையில் கிரிக்கெட் பேட்டோடு!
இன்றைய உன் நிலையோ
காலம் செய்த விளையாட்டு!
ரவிஜி … (ஆதங்கத்துடன்)
(புகைப்படம் : ரவிஜி…)
(இடம் : காவிரி ஆற்றுப் படித்துறை, மயிலாடுதுறை)
திருச்சியிலும் இதே நிலை தான்..... பார்க்கும்போதே கண்களில் ரத்தம்!
ReplyDeleteஉண்மைதான், திருச்சியிலும், மயிலாடுதுறையிலும் வாழ்ந்த எனக்கும் அதே உணர்வுதான்! என்ன செய்வது...?!
Delete