‘எல்லை’!
எல்லையில் காவல் நிற்குமவள்
பாரதத் தாயின் செல்ல மகள்!
பெற்ற தாயைப் பேணிட வேண்டி
பிறந்த நாட்டினை காக்கும் பணி!
நிர்மலக் கண்ணில் மின்னும் வீரம்!
அன்னை விழியோரம் ஆனந்த ஈரம்!
‘காத்து’ நிற்பதோ இந்திய எல்லை
நித்திய ‘கண்டம்’-பயம் ஏதுமில்லை!
காக்கி அணிந்த ஜான்ஸி ராணி…
ஏதேனும் பிறவியில் – என்
மகளாய் வா - நீ!
ரவிஜி….
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(தேசத்தைக் காத்து நிற்கும் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும்)
(எனது இடுகைகளை வாசித்து கருத்தளித்து ஊக்கமளித்து வரும் அன்பு உள்ளங்கள் அனைத்திற்கும் எனது நன்றியுடன் ... இது 100ஆம் இடுகை)



