Saturday 19 April 2014

தன்ன(னி)ழல்!


தன்ன(னி)ழல்!
பச்சை ரத்தமும்
வியர்வை ரூபத்தில்
ஆவியாய் மாறிட
சுட்டெரிக்கும்-
உச்சி வெயில்
வெளியே!
வந்த நாள் முதல்
பற்றி எரிக்கும்
தீராத தீ-
திருப்பிச் சுடும்
‘அடி’ வயிற்றில்
உள்ளே!
தன்னழல் தீர
போக்கில்லா
நிலை கண்டு
சுட்ட சூரியனே
இ(ற)ரங்கித்தரும்-
சொ(நொ)ந்த
நிழல்!    
ரவிஜி...
(புகைப்படம்: ரவிஜி)

 

8 comments:

  1. ஆழமான சிந்தனையுடன் கூடிய
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா! தங்களின் மனம் திறந்த பாராட்டு மன மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது! மிகவும் நன்றி ஐயா!

      Delete
  2. நல்ல சிந்தனை.

    படமும் நன்று.

    ReplyDelete