Monday, 28 October 2013

வாழ்க்கை...!


 

வாழ்க்கை…
என் செல்ல மகள் அனுப்பிய செல்லிடப்பேசியில்
படமாய் எடுத்த - பள்ளி சென்ற மிதிவண்டி…
பாடம் கற்க அவள் சென்ற மிதிவண்டி பழசாகி
இன்று(ம்) துணையாய் என்னோடு வயல்வெளியில்.
நான் பெ(க)ற்ற அருமை மகள் – தன் உற்ற துணையோடு
அமெரிக்க நயாகராவின் அருகாமைப் புல்வெளியில்.
என் கால்களின் சொந்தச் சுழற்சி – பாதையில்
தினம் ஓடும் - சேரிடம் ‘செல்ல’ மிதி வண்டி.
காலத்தின் சுழற்சியில் மெல்லவே நகர்கிறது
சிறுவனென அடம் பிடிக்கும் வாழ்க்கை நடைவண்டி.
                                                ரவிஜி…
(புகைப்படம் – ரவிஜி)

6 comments:

  1. வாழ்க்கை நடைவண்டி - ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    மனித வாழ்க்கை ஒரு நடைவண்டிதான்.... பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்புடன் ரவிஜி

      Delete
  3. மிகவும் அருமை ரவிஜி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிகவும் நன்றி!

      Delete