'நாம்' சிரித்தால் தீபாவளி
கள்ளம் ஏதுமில்லாக் குழந்தையின் பூஞ்சிரிப்பு
கண்கள் சுருங்கிட்ட ஆத்தாவின் குறுஞ்சிரிப்பு
தீயெனவே எரித்திருக்கும் பசி தீர வரும் சிரிப்பு
புகழ்ச்சிக்கு மயங்காதோன் சிந்தும் இதழ்விரிப்பு
சமயத்தில் உதவிக்கு நன்றியாய் புன்சிரிப்பு
வெற்றியின் களிப்பதனில் வெளியாகும் வெடிச்சிரிப்பு
காதலி(ல)ன் பார்வையிலே சிவந்திடும் வெட்கச்சிரிப்பு
மகள் பிறந்த மகிழ்ச்சிதனில் அப்பாவின் பூரிப்பு
மகன் பெற்ற வெற்றியிலே அம்மாவின் பிரதிபலிப்பு
சிரிப்புகள் பலவாகும் உணர்வுகளோ ஒன்றாகும்.
சிரிக்க மறந்த மனிதனோ பேசத்தெரிந்த மிருகம்
சிரிப்பறியா மிருகமும் உணர்த்திடும் நல் மனிதம்.
அழுகையும் சிரிப்பின் பிரிக்கமுடியா மறுபாதி
கண்ணீரும் புன்னகையின் சரிபாதி - மறுமீதி
மற்றவர் மகிழ்ச்சியில் கலந்து நாம் சிலிர்த்திட்டால்
துன்பம் எதிர்கொள்ள நிமிர்ந்து நாம் சிரித்திட்டால்
சிரிப்பிலே ஒளிர்ந்திடும் பற்களின் ஆவளி
தினமும் பண்டிகையாய் தித்திக்கும் - தீபாவளி.
ரவிஜி…
கவிதை அருமை...நடுவர்களுக்கு அனுப்புகிறேன்... நன்றி... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி ஐயா...!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தங்களின் கவிதை கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளதுதங்களின் கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கவிதையின் வரிகள் அருமை போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் ஐயா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள் என்னை பரிசு பெற்றதுபோல் உணரச்செய்கிறது...நன்றி ஐயா...!
DeleteSuperb
ReplyDeleteநன்றி!
Deleteஅருமை! வெற்றி பெற வாழ்த்தும்
ReplyDeleteநன்றி...
ReplyDeleteவிதம்விதமான சிரிப்புகளைச் சொல்லி சென்றது ரசிக்க வைத்தது.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
தங்களின் வரவிற்கும் கருத்து தெரிவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அம்மா!
Deleteஅடடா! எத்தனை விதச் சிரிப்பு! ’சிரித்தால் சொத்தெல்லாம் போய்விடுமோ’ என்றெண்ணிச் சிரிக்க மறந்தவரையும் புன்னகைக்கத் தூண்டும் கவிதைக்குப் பாராட்டுகள்
ReplyDeleteவாருங்கள்! கருத்துக்கு மிகவும் நன்றி நண்பரே!!
Delete