Wednesday, 23 October 2013

வீ(ட்)டு பத்திரம்…?!

வீ(ட்)டு பத்திரம்…?!

விற்றுப் போன வீடான போதும்
விட்டு விலகும் நேரம் வந்த போதும்
தன் கண்ணீரால் புள்ளி வைத்து
தாளாமல் கோலமிட்ட - என் அம்மா!

‘பத்திரம்’ மாறிவிட்ட புரிதல் இல்லை
விட்டுப் பிரியும் சோகமும் அறியவில்லை;
பத்திர உணர்வுடன் வண்ணம் தீட்டிடும்
என் இரட்டை பட்டுக்குட்டிகள்...?!

ரவிஜி…
(புகைப்படங்கள் – ரவிஜி…)

9 comments:

  1. வணக்கம்
    கவிதையின் வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான வரிகள்.
    சொந்த வீட்டை விட்டு வெளியேறுவதனால் ஏற்படும் சோகத்தை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இரட்டை பட்டுக்குட்டிகள் வயதிலேயே நாம் இருந்து விட்டால் நன்றாக இருந்து இருக்கும்.

    ReplyDelete