‘வேண்டும்’ விநோத ஆசைகள்
லைட் ஹவுஸ் உச்சியிலிருந்து
குதித்துப் பார்க்க வேண்டும்…!
சவப் பெட்டியில்பிணம் போல
படுத்துக் கொள்ள வேண்டும்...!
கடந்த வயதுகளை பின் தள்ளி
மீண்டும் காதலிக்க வேண்டும்...!
டிரவுசர் அணியும்பருவம் திரும்பி
தும்பி பிடித்துத் திரிய வேண்டும்…!
தாயின் கருவறைக் கதகதப்பில்
மீண்டு(ம்) இவ்வுலகில் பிறக்க வேண்டும்…!
ரவிஜி…
வணக்கம்
ReplyDeleteஐயா
தாயின் கருவறைக் கதகதப்பில்
மீண்டு(ம்) இவ்வுலகில் பிறக்க வேண்டும்
கவிதை வரிகள் அழகு...வாழ்த்துக்கள் எனது புதிய வலைப்புவின் ஊடாக கருத்து இடுகிறேன்
மீன்டும் கட்டுரைப்போட்டி வாருங்கள் வந்து தலைப்புக்களை பாருங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ஐயா...கட்டுரைப் போட்டிக்கும் வருகிறேன்.அன்புடன் ரவிஜி
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteகடந்த வயதுகளை பின் தள்ளி
மீண்டும் காதலிக்க வேண்டும்...!
டிரவுசர் அணியும்பருவம் திரும்பி
தும்பி பிடித்துத் திரிய வேண்டும்…!
//
ஆசைகள் வினோதமா? விபரீதமா? நிகழ்ந்தால் பெருமகிழ்ச்சி தானே? கவிஞன் கற்பனைகள் சில நேரங்களில் உண்மையாவதுண்டு! உங்கள் துணைவியாருக்கு சம்மதம் தானா?
கணக்காயர் எப்பொழுதும் ஒரு உல்லாசப் பொடிமட்டை...! அதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். மீண்டும் திருமணத்திற்கு முந்தைய பருவம் வந்து மனைவியை துவக்கத்திலிருந்து காதலிக்கமுடிந்தால்...! சம்மதமில்லாமல் போகுமா...? முதல் வரியிலிருந்து கடைசி வரிவரையில்...வாழ்க்கை சக்கரம் திரும்பசுழலுமா என்ற ஒரு அல்ப ஆசைதான். ஆனால் கற்பனைகளை விடவும் உண்மைகள் வினோதமானவையாக அமைந்துவிடும் பொழுது.... ;-)
ReplyDelete