ஒரு(க்)காலும் இல்லை!
கால் ஒன்றை இழந்தாலும்
காலனை நாடவில்லை.
நடப்பதில் உண்டு சிரமம்;
என்றாலும் கிடந்திடாது
நல்வழியே நடந்(த்)திடும்
இவரின் 'வைர' மனத்திடம்.
உடல் மாற்றுத் ‘திறனா’ளி
மனமோ மாறாத உழைப்பாளி!
ஊன்று(ம்)கோலும் சுழற்றும்
ஓ(ட்)டும் வண்டியின் சக்கரம்.
நெஞ்சுரத்தில் ஓ(ட்)டிடும்
தன் வாழ்க்கை சக்கரம்.
ஓடி ஓடி உழைத்திடவே
இரு கால் இவர்க்கில்லை
உழைக்காமல் ‘ஓட்டு’வதா?
ஒரு(க்)காலும் இங்கில்லை.
ரவிஜி..
(புகைப்படம் – நன்றி கூகிள்)
(உங்களின் தன்னம்பிக்கைக்கும் மன திடத்திற்க்கும்
தன்மானத்திற்கும் தலைவணங்குகிறேன் அண்ணா)
நம்பிக்கையே வாழ்க்"கை"
ReplyDeleteஅருமை ஐயா! நன்றி!
Deleteநல்லதொரு படைப்பு. நான் படிக்கும் தன்னம்பிக்கைதரும் இரண்டாவது பதிவு இது..
ReplyDeletehttp://eerammagi.blogspot.in/2014/03/blog-post_12.html இதுதான் படித்த முதல் பதிவு.
நன்றி ஐயா! உங்களின் பாராட்டிற்கும் அருமையான ஈரம் மகியின் வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கும்!
Deleteஏமாற்று திறனாளிகள் நிறைந்த உலகத்தில் இவரே உண்மையான
ReplyDeleteமாற்று திறனாளி!
உண்மைதான் ஐயா! ஏமாற்றுத் திறனாளிகளுக்கு ஏமாற்றம் தரும் ஏற்றமிகு திறனாளி இவரே!
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி.
அருமையான கவிதை. படத்திலிருக்கும் பெரியவருக்கு எனது வணக்கங்கள்.....
ReplyDeleteநன்றி ஐயா!
Delete//
ReplyDeleteஓடி ஓடி உழைத்திடவே
இரு கால் இவர்க்கில்லை
உழைக்காமல் ‘ஓட்டு’வதா?
ஒரு(க்)காலும் இங்கில்லை.//
அருமையான வரிகள்! நன்றி!
நன்றி!
Deleteநல்ல ஒரு தன்னம்பிக்கை கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDelete