ந(க)டப்பு…?!
மழையின்
தூற(வ)லை அனுபவியுங்கள்;
வெற்றாய் நனைந்து திரும்பாதீர்கள்.
உணவின்
சுவையிலே மயங்குங்கள்;
வயிற்றை
மட்டுமே நிரப்பாதீர்கள்.
கவினுறு
காட்சிகளை ரசியுங்கள்;
சி(நி)ந்தனையில் ஊறி ந(க)டக்காதீர்கள்.
தென்றலை
உணர்ந்து தழுவுங்கள்;
காற்றாய்
நினைத்து நழுவாதீர்கள்.
எதிரே
கண்டால் புன்னகையுங்கள்;
புதிரென நினைத்து கடக்காதீர்கள்!
பணத்தை
மட்டுமே ‘எண்ணா’தீர்கள்…
மனத்தை
பற்றியும் நினையுங்கள்.
வாழ்க்கையை
சுகித்து வாழுங்கள்
நாட்களை
மட்டும் ந(க)டத்தாதீர்கள்!
எம்.ஜி.ஆர்...
(பட
உதவி : நன்றி கூகிள்)
(முதல்
அடி எடுத்துக் கொடுத்த பாப் மார்லிக்கு நன்றி)
நன்று.
ReplyDeleteநன்றி...!
Delete