Friday, 2 September 2016

ம(மா)ரணம்…!



ம(மா)ரணம்…!
எங்கோ, எப்பொழுதோ,
எப்படியோ, எவரையும், 
ஏதேதோ நிமித்தமென-
எதிர்கொள்ளும் மரணம்.
காலத்தின் கோலமாய்
காட்சிப் பிழை மேவிட,
நட்பிலும், உறவிலும்,
தப்பிடும் -  க(கா)ரணம்…
மரணங்கள் தாண்டியும்
தந்திடும் மா-ரணம்!
உலகைப் பிரிகையில்
வலி ம(து)றந்து போகும்.
உறவுகள் பிரிகையில்
வலி – உயிர் போகும்!
எம்.ஜி.ஆர்.
(பட உதவி - நன்றி கூகிள்)

5 comments:

  1. //மரணங்கள் தாண்டியும்
    தந்திடும் மா-ரணங்கள்!//


    வாத்யாரே ! சூப்பர் வரிகள்.
    படிக்கும்போதே மனம் ரணமாகியது.

    ReplyDelete
  2. அருமையான பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. தங்களின் கருத்து எனக்குப் பெருமை! நன்றி!!!

    ReplyDelete