Thursday, 4 August 2016

நே(யோ)சிப்பு…!






நே(யோ)சிப்பு…!
நீங்கள் சொல்கிறீர்கள்
மழையின் மீது மோகமென்று;
ஆனால் மழை வந்தாலோ-
குடையால் போடுகிறீர் மடை!
நீங்கள் சொல்கிறீர்கள்
சூரியன் சுகம் தருவதாய்;
ஆனால் வெய்யில் வந்தாலோ
நிழல் நாடி ஒதுங்குகிறீர்கள்!
நீங்கள் சொல்கிறீர்கள்
காற்றோடு காதல் உண்டென;
ஆனால் காற்று வந்தாலோ
ஜன்னலை மூடி விடுகிறீர்கள்!
என்னையும்நேசிப்பதான
உங்களின் உச்ச வார்த்தைகள்-
அச்சம் நோக்கி செலுத்துகிறது;
அதுவும் நிராகரிப்போ என்று!!
(ரெகே பாடகர் - பாப் மார்லி)
தமிழில் – ரவிஜி…
(புகைப்படங்கள் : நன்றி கூகிள்)

3 comments:

  1. நே(யோ)சிப்பு…!

    அருமையான சிந்திப்பு....!!

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete