திரு-நங்கைய(யா)ர்???
உடன் பிறந்தும் தங்கைக்கு -
ஆருயிர் அண்ணனில்லை;
என் அருமை தம்பிக்கோ- நான்
ஆசை ‘அக்கா’வுமில்லை?
பெற்றெடுத்த தாய்க்கு நான்
உற்ற தலை ‘மகனி’ல்லை;
பேர்கொடுத்த தந்தைக்கு நான்
ஊர் போற்றும் ‘மகளு’மில்லை!
பெண்மை உணர்வு கொண்டும்-
‘செல்வி’ மரியாதை கிட்டவில்லை;
‘திருமதி’ பட்டமும் எட்டவில்லை?!
செல்லுமிடம் ஏதும் அற்றுப்போனேன்
காய்ந்த கள்ளியென - இற்றுப்போனேன்?
கொக்கரித்து தி(ம)னம்
நி(வி)ற்கும்
மனம் வக்கரித்த வீணர்களால்
வக்கற்று - விக்கித்து நிற்கின்றேன்?
படாது சில்லரை - சுண்டும் சில விரல்கள்;
என் நெஞ்சம் சிந்தும் - குருதிப் பரல்கள்!
நட்பாய் நான் தரும் புன்னகையும்-
கைப்பாய் திரும்பி >>
வரும் ‘ஏளனமாய்’?
தேடித்தேடி அலைவதோ - மனித நேசம்;
எனக்கென இறுதியாய் உற்றதோ-
தலையணை உறையான சேலையில்
‘பெற்ற’ என் - அம்மாவின் வாசம்!
ரவிஜி---
(புகைப்படங்கள் - நன்றி கூகிள்)
(திருநங்கையரும்
நம்மைப்போன்ற மனிதப்பிறவிகள்தாம்! வெகுசிலரே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு
வளர்ந்துள்ளபோதிலும் மற்றவர்கள் நிலை…? பெண்மை உணர்வு மேலிட்டிருக்கும் இவர்களை
சகோதரியாகவோ அல்லது தாயாகவோ நினைக்காது, தீண்டத்தகாதவர்களாக இளக்கரித்து ஒதுக்கி
ஓரங்கட்டும் மனிதர்களே அதிகம்! அந்த சகோதரிகளின் மனநிலை என்ன பாடுபடும்! சில
நேரங்களில் அவர்கள் வெளிப்படுத்தும் சமுதாயத்தின் மீதான கோபம்கூட ஓரளவு நியாயமானதாகத்தான்
தொன்றுகிறது! அவர்களையும் மனிதாபிமானத்தோடு நடத்துவோம்! அன்பான, ஆதரவு கலந்த
வார்த்தைகளையாவது அவர்களுக்கு நாம் அளித்து அவர்களின் தீராத மனக்குமுறலை குறைக்க
முயற்சிப்போம்! அந்த சகோதரியருக்கு இது எனது சிறு அர்ப்பணம்!)
(திரு. ரூபன் அவர்கள் அறிவித்துள்ள தீபாவளி-2014 கவிதைப்போட்டிக்கான விரும்பிய தலைப்பில் கொடுத்துள்ள போட்டிக் கவிதை இது)
திருநங்கையின் மனநிலையில் இருந்து தாங்கள் உணர்ந்து பார்த்த விதம் அருமை.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteகவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை காண வேண்டுகிறேன் நன்றி நண்பரே...
ReplyDeleteபடித்து பின்னூட்டம் இட்டுள்ளேன்! வெற்றிபெற வாழ்த்துகள்!
Deleteசிறப்பான கவிதை.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
மிகவும் நன்றி நண்பரே!
Deleteமனதைத் தொட்ட வரிகள்! திரு நங்கையரும் இந்தச் சமூகத்தின் அங்கத்தினரே! அவர்கலையும் நாம் மதிக்க வேண்டும்! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?!!!
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
ReplyDeleteஎண்ணப் பகிர்விற்கான கவிதை சரி
ReplyDeleteவண்ணப் படத்திற்கான கவிதையைக் காணோம்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
முடிவுகள் நடுவர்களின் கையில்
மிகவும் நன்றி! வண்ணப்படத்திற்கான கவிதையும் தனி இடுகையாக தமிழச்(சி)சு ஓவியம் கொடுத்துள்ளேன்! தயவு செய்து காண்க!
ReplyDeleteநல்லதொரு சிந்தனை! வெற்றி பெற வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
கவிதையின் வரிகள் சிறப்பாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் நன்றி!
ReplyDeleteஇன்றைய 03.09.2014 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள் நண்பரே,,, எனது பதிவு ''மௌனமொழி'' காணவும்.
ReplyDelete