தமிழச்(சி)சு ஓவியம்!
நெற்றியில் பொட்டு வைக்கும்
பழக்கம் - விட்டுப் போனது!
பட்டான கட்டுக் கூந்தல் ‘கட்’ ஆகி
லூஸ்
ஹேர் - ‘ஸ்டைல்’ ஆனது!
ஜீன்ஸ் டாப்ஸ் ஷு அணிந்து
கோக்குடன் – பீஸா,பர்கர்,பாஸ்தா!
‘முகநூலி’ல் முகம் மறைத்(ந்)து
மாமா, அத்தை, சித்தப்பா- என
கொஞ்ச(சு)ம்
சொந்தம்கூட விட்டு
அமெரிக்க சாப்ட்-வேர் இ(த)னிமையோ
என ச(சு)ற்றுப்புற
நிலை மய(க்)ங்கும்!
மாறா அகம் சொச்சமாய் நா(வீ)டு
திரும்ப-
சில்லறையாய் சேர்த்து அப்பத்தா வாங்கிய
ஆசை - மங்கல மஞ்சள் புடவையோடு
கூவிப் பூவிற்கும் ‘அம்மா’வின் கூடை
‘கட்டு’ப்பூவோடு வளைக்கரம் இடைநிறுத்த-
முகத்திலும் கொஞ்(ச)சும்
மஞ்சள் எ(ன்)ன;
நெற்றியில் பொட்டோடு திருநீறு மின்ன;
தொங்கும் குடை ஜிமிக்கிகள் கா(த்)தாட
தலையில் மண(ய)க்கும்
மல்லிகை!
நெஞ்சில் நிறைந்த உய(யி)ர்
ஓவியத்தை
அமெரிக்க காமராவில் அப்பா ப(பு)டம் போட
மெல்லிய நாணச் சிவ(ரி)ப்பாய்
- வேர்களால்
மீண்டு(ம்)
மலர்ந்தாள் - தமிழச்சியாய்!
ரவிஜி---
(திரு. ரூபன் அவர்கள் நடத்தும் தீபாவளி - 2014 கவிதைப்போட்டியில் கொடுக்கப்பட்ட படத்திற்கான எனது முதல் போட்டிக்கவிதை இது!)
தீபாவளி 2014 கவிதைப்போட்டிக்கான இரண்டாவது கவிதை -
கவிதை அருமையாக இருக்கிறது ஐயா...
ReplyDeleteநன்றி நண்பரே!
DeleteNalla irukkuthu anna ..meena
Deletethank you my dear sis
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் கவிதை நன்றாக உள்ளது..
ஒரு போட்டியாளர் இரண்டு கவிதை எழுத வேண்டும் ஒரு தடவை விதி முறையை பாருங்கள். ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ஐயா! இரண்டு கவிதைகள் எழுதி தனி இடுகைகளாக இட்டு தங்களுக்கு அனுப்பியும் உள்ளேன்! தலைப்பு திருநங்கைய(யா)ர்! தயவுசெய்து காண்க! அன்புடன் ரவிஜி
Deleteநல்ல கவிதை.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
அருமையான கவிதை..
ReplyDeleteபோட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.!
மிகவும் நன்றி!
Deleteஆஹா மிகவும் வித்தியாசமான கவிதை......... போட்டிக்கு!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
ReplyDeleteஎண்ணப் பகிர்விற்கான கவிதை சரி
ReplyDeleteவண்ணப் படத்திற்கான கவிதை சரி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
முடிவுகள் நடுவர்களின் கையில்
மிகவும் நன்றி! வண்ணப்படத்திற்கான கவிதையும் தனி இடுகையாக தமிழச்(சி)சு ஓவியம் கொடுத்துள்ளேன்! தயவு செய்து காண்க!
ReplyDeleteஅருமை! வெற்றிபெற வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteகவிஞர்க்கு வணக்கம்!
ReplyDeleteஎல்லோர்க்கும் வராத புதிய சிந்தனை.
வார்த்தையை ஓரெழுத்தால் இரட்டித்து பொருள் வேறுபடுத்தும் பாங்கு,
மரபுப் பெண்களையும் புதுமைப் பெண்பளையும் ஒரு சேர நிறுத்திக் காட்டிக் கவிதை படைத்த விதம்,
அத்தனையும் இனிமையான புதுமை.
தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி!
தங்களின் வாழ்த்திற்கு மிகவும் நன்றி! உங்களின் ரசனையும் மகிழ்ச்சி அளிக்கிறது. அன்புடன் எம்ஜிஆர்
Deleteதிருநங்கையர் குறித்த தங்களின் கவிதை இணைப்பிற்குள் செல்ல முடியவில்லை அய்யா!
ReplyDeleteதற்சமயம் சுட்டியினை சுட்டிய இடம் செல்லப் பணித்துவிட்டேன்!சுட்டியின் குறையினை சுட்டியதற்கு நன்றி! அன்புடன் எம்ஜிஆர்
Deleteவலைசரத்தில் உங்களை பற்றி :
ReplyDeleteதெரியுமா உங்களுக்கு ?
நன்றி நண்பரே! பார்த்து பின்னூட்டம் இடுகிறேன்!
Delete