Tuesday, 19 August 2014

க(ந)னவு!


பீட்டில்ஸ் குழுவின் புகழ்பெற்ற பாடகர் “ஜான் லென்னன்” அவர்கள் பாடிய உன்னதப்பாடல்! மனித நேயம், சகோதரத்துவம், பொதுவுடமை என்று பலவற்றையும் பிரதிபலிக்கும் உன்னதப்பாடல்! அதனை தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன்! படித்துவிட்டு பாடலையும் கேளுங்கள்!
 
க()னவு!
கனவு!
மெய்ப்பட ஒரு – கனவு
வேண்டும் உனக்கு!
சொர்க்கம் ஏதுமில்லை;
மேலே – வானம் மட்டும்;
கீழே நரகமுமில்லை.
 கனவு!
மக்களின் சிந்தையில்-
இன்றைய தேவை மட்டும்!
நாடென்று ஏதுமில்லை,
கொலைகள் ஏதுமில்லை;
கொல்லப்பட காரணங்கள்
காணக்கிடைக்கவில்லை!
‘மதங்’களும் இல்லை!
 கனவு!
மக்கள் அனைவர்க்கும்
அமைதியான வாழ்க்கை!
நீ இளக்கரிக்கலாம்
அது பகல் கனவென்று!
எப்படியும் எண்ணங்கள்
ஒன்றோடு ஒன்றாகும்!
உலகம் ஒன்றுபட்டதாகும்!
 கனவு!
தனியுடமை இல்லையென!
எனது நம்பிக்கை
அது சாத்தியமென்று!
பசிக்கும் பொறாமைக்கும்
வாய்ப்புகள் ஏதுமில்லை!
மனிதரிடையே எங்கும்
நிலவும் - சகோதரத்துவம்!
 க()னவு!
மனித இனம் அத்தனையும்
பூவுலகை பகிர்ந்துகொள்வதாய்!
நீ எள்ளிடக்கூடும்
நான் கனவில் மிதப்பதாய்!
நானொன்றும் தனியனல்லன்
என்றேனும் உன் எண்ணம்
ஒருமித்து ஒன்றாகும்!
உலகம் - ஒன்றுபட்டதாகும்!
(பாடலை இயற்றிப்பாடியவர் – ஜான் லென்னன்!)
தமிழில் –  எம்ஜிஆர்---

7 comments:

  1. ஜான் லென்னனின் கனவை சுவைபட தமிழில்
    நனவாக்கியுள்ளதற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமையான மொழிபெயர்ப்பு! கனவு நனவானால்......இப்படி ஒரு உலகம் வாய்த்துவிட்டால் ஆஹா....வாசிக்கும் போது மிதந்தோம்....கிள்ளிப் பார்த்துக் கொண்டோம்....கனவுதான்!

    ReplyDelete
  3. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  4. வலைச்சரம் வழியாக வந்தேன் வாழ்த்துக்கள் ....!
    இனிய கனவுகள் !

    ReplyDelete