Monday 29 June 2015

பி(உ)ழைப்பு!



பி(உ)ழைப்பு!
பசியாம் பிணியில் இவர் வயிறு;
செருப்பு அ(றி)ணியா இவர் பாதம்!
பள்ளி சென்றிட வழியில்லை!
தோளில் புத்தகச் சுமையில்லை!
வண்ணம் பூசுதல் இவர் வேலை
எண்ணம் - உணவு மூவேளை!
குடும்பத்தின் பாரம் சுமப்பதனால்
வாழ்க்கைப் பாடம் இவரறிவார்;
உலகில் பிறந்த அனைவர்க்கும்
வாழ்க்கைப் பாதை ஒன்றாகும்
வாய்ப்பைத் தேடி நடந்திடவே
வாய்த்த திசைகள் வேறாகும்!
பிழைப்பை வென்றிட வழிதேடும்
உழைப்பே இவரை நிலைநிறுத்தும்!
ரவிஜி---
(புகைப்படம் – நன்றி கூகிள்)

9 comments:

  1. //உலகில் பிறந்த அனைவர்க்கும்
    வாழ்க்கைப் பாதை ஒன்றாகும்
    வாய்ப்பைத் தேடி நடந்திடவே
    வாய்த்த திசைகள் வேறாகும்!//

    உழைப்பும் பிழைப்பும் பற்றிய ஆக்கம் அருமை. பாராட்டுகள்.

    // எண்ணம் - உணவு மூவெளை! //

    சரியா? ’மூவேளை’யாக இருக்குமோ ஒருவேளை ?

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் கூறியது சரிதான்! தட்டச்சுப்பிழை!! மிகவும் நன்றி வாத்தியாரே! உங்கள் எம்ஜிஆர்

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    படமும் கவியும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. குடும்பத்தின் பாரம் சுமப்பதனால்
    வாழ்க்கைப் பாடம் இவரறிவார்;//

    நண்பரே! ஏட்டுக் கல்விதான் கிடைக்காது....ஆனால், இவர்கள் உழைப்பினால், வறுமையினால் வாழ்க்கைப்பாடத்தைப் பயின்றிடுவர் இல்லையோ ??!!

    வரிகள் அருமை!

    ReplyDelete
  4. //வண்ணம் பூசுதல் இவர் வேலை

    எண்ணம் - உணவு மூவேளை!

    குடும்பத்தின் பாரம் சுமப்பதனால்

    வாழ்க்கைப் பாடம் இவரறிவார்;//

    இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete