திருவாளர்கள் ரூபன் மற்றும்
யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல்
ஆறுதல் பரிசு
திருவாளர்கள் ரூபன்
மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும்
கவிதைப் போட்டி 2015”ல் எனக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது
என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும்,
மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றிகள்! பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
பரிசு அறிவிற்பிற்கான
இணைப்பு இதோ
பரிசிற்குத்
தெரிவுசெய்யப்பட்ட எனது கவிதை கீழே!
இணையத் தமிழே இனி…
இருப்பிடம் அற்றுப்போய்
புலம் பெயர நேர்ந்தாலும்
தமிழினினம் ஒருங்கிணைய
வழியின்றிப் போனாலும்
உணர்வதனால் ஒன்றாகும்
ம(அ)றத் தமிழர் நாமாவோம்!
இடமின்றிப் போனாலும்
தடமின்றிப் போய்விடுமோ?
தமிழன் என்று சொல்லி
தலை நிமிர்ந்து நின்றிடவே,
உணர்வுகளை ஏந்தி வரும்
ஓ(போ)ர் களம் என்றாகும்-
இணையில்லா ‘இணைய’தளம்!
முத்தமிழும் ஒத்திசையும்
க(வெ)ட்டி வைத்த கரும்பெனவே
மட்டின்றி இனித்திருப்பாய்
தமிழ(த)னை இணைத்திருப்பாய்
ஈடு இணை இல்லாததாய்-
இணை(த)யத் தமிழே ‘இனி’…!
ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்
வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது! மிகவும் நன்றி ஐயா!
Deleteவரிகள் சிறப்பாக உள்:ளன....வாழ்த்துகள் நண்பரே!
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
Deleteகவிதை கனஜோர். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteதங்களின் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!
Deleteமனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் நன்றி!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.. தொடர் வெற்றி மழை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ஐயா! இது நீங்கள் அளித்த வாய்ப்பு! அதற்கும் மீண்டும் எனது நன்றிகள்!
Delete