Friday 21 December 2012

அஞ்சலி

 


அஞ்சலி

ஒரு கொடியில் பிறந்திருந்தோம்
மலருமுன்னே உதிர்ந்திட்டாய்...
பாசத்தின் வாசம் உணருமுன்னே
காற்றோடு கலந்திட்டாய்.

அண்ணாவென்று அணைப்பாரில்லை
மாமாவென்று அழைப்பாருமில்லை.
நினைவில் நின்றதெல்லாம்
'தூளி'யில் உன் முகம்...

பள்ளி மணி ஒலித்திட
துள்ளி வரும் ஓட்டத்திலும்...

கல்லூரி பயின்றிட்டு
மொட்டவிழும் மலரெனவே
கட்டவிழ்ந்த களிப்பினிலும்...

ஆறுதல் தரும் அம்மாவிடம்,
அரவணைக்கும் அன்பு மகளிடம்,
ஆதுரமாய் 'ராசா'வெனும் ஆத்தாவிடம்...
உன் முகம் ... தேடுகிறேன்...

'அண்ணா என்றிடும்
ஒவ்வொரு பெண்ணிலும்
உன்னையே காண்கிறேன்...!

ரவிஜி...

(வானின்று பாசமழை பொழியும் அன்புத் தங்கைகள் வீணா, ரெமி நினைவாக...)

3 comments:

  1. எனது ஆழ் மன உணர்வுகளின் வெளிப்பாடு...வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா...!

    ReplyDelete