Saturday, 8 December 2012

கீ(ற்)று


கீ(ற்)று

முதல் நாளில்
முகமலர்ந்த சிரிப்பு,
மறு நாளில்
சிக்கனமான குறுஞ்சிரிப்பு…
மூன்றாம் நாள்
இறுகிய உதடுகளென
முகம் காட்டும்…!
கோடியில் புரண்டாலும்
மூன்று நாட்களே
விருந்து…!
மின்னலின் கீற்றோடு
வேய்ந்த என் வீடு…!

             ரவிஜி…
புகைப்படம் - ரவிஜி

 

1 comment: