‘செல்’லிட(க்கு)ப் பேசி!
கைக்கட்டும் கடிகாரம்
ஆடம்பரம் என்றானது;
கணக்கிடும் கால்குலேட்டர்
காலாவதியாகிப் போனது;
அதிகாலை அலார டைம்பீஸ்-
ஆதரவே தேவையில்லை;
அலங்காரப் பொருளாகி
அலமாரியில் ரேடியோ;
வாக் மேன் என்பதோ-
வக்கற்றதாய் வீணானது;
தந்தி என்ற சேவையை-
கடந்த காலமாக்கியது;
தரைவழிப் பேசியையும்-
தரையிலே வீழ்த்தியது;
கணிணிகூட மதிப்பிழந்து-
போட்டியிலே தேய்ந்தது;
எங்கெங்கும் உற்றதாய்-
எல்லாம் பெற்றதாய்,
செல்லும் இடமெல்லாம்-
‘செல்’லரித்த இடமாக்கி;
முகநூலில் மூழ்கிப்போய்
முகமற்று ‘செல்பி’ஷ் ஆன-
மட மனிதனைக் ‘கண்டு’
கைகொட்டிச் சிரிக்கிறது
‘ஸ்மார்ட்’ஆன
கைப்பேசி!
ரவிஜி...
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)
(வலைப் பதிவர் சந்திப்பு 2015 புதுக்கவிதைப்போட்டிக்கான கவிதை)
அருமை
ReplyDeleteநன்றி!
Deleteநன்றி!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி!
ReplyDeleteஆஹா......
ReplyDeleteஹா...ஹா..நன்றி நண்பரே!
ReplyDelete