அப்பாவின் – ‘அம்மா!’…
அவள் மூச்சில் ஊதிக் கட்டி வைத்த
பலூனை ‘குத்தி’விட்டானென்று
அறியாச் சிறுவனிடம் காழ்ப்பு…!
அவள் முத்தமிட்ட தடமென்று
மூன்று நாளான பின்னும்
மழித்திடாத அவன் கன்னம்….!
அவள் முகம் துடைத்த காகிதம்
ஆயிரம் ரூபாய் ப(ம)ணமெனவே
அவன் பர்சினுள் பத்திரமாய்….!
அவன் அம்மாவின் அழகு ஆரம்
அணிந்து இதழோரம் ‘அழகு’
காட்டிய அவன் தங்(கை)க முகம்….!
அப்ப்ப்……பா என்று அரவணைத்து
அவள் கொஞ்சிய வார்த்தைகளின்
அசரீரியாய் ஒலிக்கும் அவன் காதில்….!!
அவன் அம்மா விட்டுக்கொடுத்த இடம்…..
அதில் அவள் பதித்திட்ட பாசத்தடம்….!
அவள் விட்டுச் செல்லும் வெற்றிடம்…???
மொட்டவிழ்ந்து ‘மணக்கும்’ ரோஜா
சேரிடம் சென்று சேர்ந்திருக்கும்.
முட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்…….!
MGR…
(எனது நண்பர் தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தபின்னர் சில நாட்கள்
கழித்து நான் அவரைச் சந்தித்த போது “மகள் எப்படி இருக்கிறாள்” என்ற என் கெள்விக்கு
பிரிவின் ஆற்றாமை தாளாது நடு ரோடென்றும் பாராது தெம்பி அழுத பின் “நல்லா இருக்கா!” என்று கண்ணீருக்கிடையேயான புன்னகையுடன்
சொன்ன கண்ணனுக்காக இந்தக் கவிதை)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது பதிவிட்ட கவிதை)
(படங்கள் : நன்றி கூகிள்)
(வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது பதிவிட்ட கவிதை)
(படங்கள் : நன்றி கூகிள்)
கவிதை, ஸூப்பர் ஸாரே....
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete//மொட்டவிழ்ந்து ‘மணக்கும்’ ரோஜா
ReplyDeleteசேரிடம் சென்று சேர்ந்திருக்கும்.
முட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்…….!//
உண்மை. அருமை. [சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாடல் தான்] பாராட்டுக்கள்.
நன்றி அன்பு வாத்யாரே! - என்றும் அன்புடன் எம்ஜிஆர்
Deleteஅப்பாவின் அம்மா அருமை....
ReplyDeleteமிகவும் நன்றி சகோதரி!
Deleteஅருமையான கவிதை நண்பரே. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
மிகவும் நன்றி!
Deleteமுட்கள் சுமந்து நிற்கும் வேர்கள்-
ReplyDelete‘காய்ந்து’ வக்கற்று சோர்ந்திருக்கும்//
அருமை அருமை! (இது டெம்ப்ளேட் கமென்ட் அல்ல நண்பரே)
அனுபவித்து கொடுத்த பின்னூட்டம்! மிகவும் நன்றி நண்பரே!
Delete