‘பட்டு’ப்போன மரம்..?!
பெறாமல் போன பிள்ளை...
சொல்லாமலே போன கணவன்...
வெறுத்திடவும் எவரும் இல்லை
காதறுந்த ஓர் செருப்பும் இல்லை.
கள்ளிக் காட்டிடையே
முள்தைத்த கால் கடுக்க
சுமந்த சுள்ளிக் கட்டிறக்கி
சா(ஓ)ய்ந்து நின்றேன் காலாற…!
என் வயிற்றுத் தீயாற
இன்றிரவு அடுப்பெரிக்க
மீண்டு(ம்) சுமக்க வேண்டும்
‘பட்டு’ப்போன மரம் நான்…??
ரவிஜி…
(பட உதவி – காரஞ்சனின் வலைப் பூ)
Wow loved the line. Even without the Earless slipper. Made me almost cry. Hats off anna.
ReplyDeleteWow loved the line. Even without the Earless slipper. Made me almost cry. Hats off anna.
ReplyDeleteநன்றி சுபாஷ்...!
Deleteவளைந்து கொடுப்பது ஊன்றிய கோல்மட்டும்! தோன்றிய கவிதை இரசித்தேன் பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteமிகவும் நன்றி நண்பரே!
Deleteபடமும் கவிதையும் நெஞ்சை கனக்க வைத்தது.
ReplyDeleteமிகவும் நன்றி!
Delete