2
இளமை மென்மை நிதானம் சூரியன் பிரகாசம்
மகிழ்ச்சி முனைப்பு நற்பேறு பிரம்மா சொர்கம்
பொருள்கள் பலவாகும் பெயரோ ஒன்றாகும்
அழகன் முருகனை தருணையே அவை குறிக்கும்
ராஜா இவனெனினும் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை
ரோஜா மலரெனவே பூமிக்கு அவன் வந்தான்
தென்னரசி என்கின்ற பெண்ணரசி பெற்ற மகன்
தந்தை குலசேகரன் கூர்தீட்ட அவன் வளர்ந்தான்
நடைபழகும் பருவத்தே அவன் கையில் காமிரா
குறும்புப் பார்வையோ புன்னகைக்கும் ஏமிரா
பள்ளிப் பருவத்தே எம்முடன் வந்திணைந்தான்
நரம்பும் சதையுமாய் பின்னிப் பிணைந்திருந்தான்
பெற்றோராய் எங்களை அன்றே வரித்துக் கொண்டான்
இதயங்களை மலரென முழுதாய் பறித்துக்கொண்டான்
அக்காவின் கொஞ்சலிலே அவனது அகம் மலரும்
அக்-காவின் இதயத்தில் நிலையான இடமிருக்கும்
தங்கைகள் கண்டால் பாசமழை பொழிந்திடுவான்
மெழுகாய் உருகிடுவான் பாகாய் இளகிடுவான்
தம்பிகள் இவனுக்கு இணையில்லா நண்பர்கள்
குசும்புடன் வம்பிழுக்கும் ஆருயிர் வம்பர்கள்
சித்திகளின் பாசமென்றும் வற்றா நதியாகும்
பற்றை அனுமதியான் வட்டியுடன் திரும்பிவிடும்
துயரினில் வழியும் எவர் விழியும் துடைப்பான்
துன்பம் தொடராது வழியையும் அடைப்பான்
கொக்கொக்கக் காத்திருப்பான் குத்தொக்கும் வெற்றிக்கு
எத்திக்கும் எதிர்கொள்வான் உச்சத்தைத் தொட்டிடவே
மென்பொருள் துறையினிலே அவனோர் விற்பன்னன்
அக்கறை செலுத்துவதில் ஈடில்லா மாமன்னன்
தலை நிமிரச் செய்தது தளராத நம்பிக்கை
தலைக்கனம் காட்டாது அவனது நடவடிக்கை
வைரமென மின்னும் மணமகனாய் தருண் பாபு
வைரத்தைப் பதிக்கும் பதக்கமானாள் ஜெயஶ்ரீ
ஆல்போல் வேரூன்றி அருகாய்த் தழைத்திருக்க
வாழ்த்துச் சொன்னாலோ நானோர் கற்காலம்
வலைத்தளமாய் விரிந்து செல்கோபுரமென வளர்ந்து
வாழ்வாங்கு வாழ்ந்திருக்க வாழ்த்திடுவோம் இக்காலம்
என்றென்றும் அன்புடன்,
ரவிஜி...