Showing posts with label விஞ்ஞானி. Show all posts
Showing posts with label விஞ்ஞானி. Show all posts

Monday, 5 May 2014

அ(வி)ஞ்ஞானி!

அ(வி)ஞ்ஞானி!
வேண்டாத பொருளென்று
வீசி நான் எறிந்ததெல்லாம்
விளையாட  உகந்ததாகும்
விஞ்ஞானி என் மகளுக்கு.
பயனற்றுப் போனதென
படைப்பினில் ஏதுமில்லை
வாழ்க்கையை படிப்பித்தாள்
அஞ்ஞானி  அப்பனுக்கு!
ரவிஜி…
(புகைப்படம்: ரவிஜி)