வாத்தியார்
கொடுத்த விருதுகள்!!!
சிகரம் தொட்ட பதிவாளர், பதிவுத்
திலகம், (Hit rate சும்மா
எகிறிடுச்சே!!!) மதிப்பிற்கும், பிரியத்திற்கும் உரிய
எனதருமை வாத்தியார் திரு.வைகோ
அவர்கள் 2014 துவக்கத்தில் ஆரம்பித்த சிறுகதை விமர்சனப் போட்டியை
எத்தகைய எதிர் விமர்சனத்திற்கும் இடமின்றி
மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்து வெற்றிவிழா நடத்திக்கொண்டிருக்கும்
மாபெரும் சாதனைக்கு எனது நெஞ்சார்ந்த
பாராட்டுகளையும் பெருமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்!
ஏதோ இந்தப் போட்டியை நானே நடத்தி முடித்ததுபோல ஒரு பெரு மகிழ்ச்சி எனக்குள்!
அப்படி ஒரு நெருக்கத்தினை, (இதுவரை
நேரில் பார்த்திராதபோதும்) மனதளவில் என்னிடம் ஏற்படுத்திவிட்டார்!
கூட்டத்துல எட்டிப் பாக்கப்போனவனையே புடிச்சு மாப்பிள்ளையாக்கி மணையில உக்காரவச்ச
கதையா VGK-13ல் விமர்சனப்போட்டிக்குள்ளார எட்டிப்பாத்து
நடுப்புற கொஞ்சம் (வலை)பக்கத்த
காணும்கிறமாதிரி (எந்த காரணமாக இருந்தாலும்) எஸ்கேப் ஆகிவிட்டஎனக்கு(ம்)
இரண்டு விருதுகள் கொடுத்துள்ளார்! இந்த
மாபெரும் அங்கீகாரத்திற்கு எனது தலைவணங்கி இந்தப்பதிவில் எனது நென்சார்ந்த
நன்றியை மீண்டும் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்!
என்னோடு விருது பெற்ற சக பதிவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்!
1. எட்டு முறைக்கு மேலாக
பரிசு வென்றவர்களுக்கான கீதா விருதில்
நான்காம் இடம் அளிக்கப்பட்டதற்கான அறிவிப்பு இணைப்பு இதோ!
- நான்கு முறை ஹாட்ரிக் வென்றதற்கான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி விருதில் மூன்றாம் இடம் வழங்கப் பட்டதற்கான அறிவிற்பிற்குரிய இணைப்பு இதோ!
இந்த மாபெரும் வாய்ப்பினை
நல்கிய திரு. வைகோ மற்றும் நடுவர் ஐயா திரு. ஜிவி
அவர்களுக்கும் எனது நன்றிகள்! ஒவ்வொரு நிலையிலும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி என்னை
வெளிக்கொணர்ந்த விஜிகே வாத்யாரையே இந்த விருதுகள் இரண்டும் உண்மையில் சேரும்!
என்றென்றும் அன்புடன்,
உங்கள் அன்பு,
எம்ஜிஆர்---