Tuesday, 9 October 2012

நான் = நீ = அவன்(ள்)...


நான்நீ = அவன்(ள்)... 

சூரியனைக் கண்டு
சுணங்கிப் போகும்
பனித்துளியல்ல நான்;
சுடும் சூரியனையும்
எதிர் கொள்ளும்
வியர்வைத் துளி!

சொகுசாய் = மலர்கள்
தீண்டும்
தென்றலல்ல நான்;
முரட்டு மரங்களையும்
மோதி முறிக்கும்
சூறாவளி!

அடி பணிந்து
அடங்கிப் போகும்
கரையல்ல நான்;
ஆர்ப்பரித்து
எதிர்த்து எழும்
கடலலை!

அநீதிகள் கண்டு
கொதித்துச் சிலிர்க்கும்...
தனியனல்ல நான்;
நான்...,நீ..., அவன்(ள்)...,
நாம்...!!!

                   -ரவிஜி...

பு(இ)கழ்ச்சி...?


பு()கழ்ச்சி

புகழ்ச்சி
என்னை
வெட்கம் கொள்ள
வைக்கிறது;
ஏனெனில்-
நான்
அதற்கென-ஏங்குகிறேன்
ரகசியமாக...!

                                                    தாகூர் (தமிழில் = ரவிஜி)

அழிக்கும் ஆசைகள்...!


அழிக்கும்சைள்...!

எனது ஆசைகள்
முட்டாள் தனமானவை.
ஏனெனில்-
உனது பொற்றிகளின்
ஊடாக - அவை
கூக்குரலிடுகின்றன!
ஏ ! இறைவனே!
அவற்றை நான்
செவிமடுக்காமல்
இருப்பேனாக.

                                                            தாகூர்   (தமிழில் - ரவிஜி)

புகைப்படம் : நன்றி - கூகிள்




Monday, 8 October 2012

Wednesday, 3 October 2012

த(இ)னிமை...?!


த()னிமை...?!

எனது வீட்டிற்குள்
உன்னை நான்
அழைக்கவில்லை...
அன்பே!
என்
தனிமைக்குள்
வா!

                                                     தாகூர் - (தமிழில் - ரவிஜி...)



நீல(ள)... வானம்...!


நீல(ள)... வானம்!

பள்ளிப் பருவத்தின்
இளம் மட்டைத்துள்ளல்கள்;
என் வீட்டு ஜன்னலின்
கண்ணாடி விள்ளல்கள்.
கடலன்ன நீல வானம்
காணத் தந்த வள்ளல்கள்?

                                                                                             ரவிஜி...
(புகைப் படம் : ரவிஜி...)

Monday, 1 October 2012

நிலை...?


புகைப்படம் : ரவிஜி...

தள்ளாமை...!

தள்ளாமை

'தள்ளாத' வயதிலும்
தள்ளிடும் சைக்கிள்!
குலை தள்ளிட்ட
தென்னைக்கான தேடல்!

                                                                                         ரவிஜி...
                                                                                        (புகைப்படம் ரவிஜி...)

அப்பா...!


அப்பா...!

என் இதயம்
உலகின் கரையில்
அதன்
அலைகளை வீசி
உனது
பெயரின் கீழே
இவ்வாறெழுதி-
கண்ணீர் மல்கிட
கையொப்பமிடுகிறது,
"நீ. . .
என் உயிர்!"

                                                                                          தாகூர் (தமிழில் - ரவிஜி...)
புகைப்படம்: நன்றி கூகிள்

உயர்வு

உயர்வு

விண்ணை முட்டி
உயர்ந்து நின்ற மலை
கொக்கரிதது,
சமவெளியைப் பார்த்து;
"நான் உயர்ந்தவன்!"

சமவெளி சொல்லியது
"உண்மை-
ஆனால் உன்
உயர்வு வெளிப்படுவது
என்
சம நிலையொடு
ஒப்பிடப் படும் போதுதான்!"
மலை-
மெளனமாயிற்று.

                                                                                                   ரவிஜி...
                                                                                                 (நன்றி - தாமரை-நவம்பர்-91)
(புகைப்படம் - ரவிஜி)

திமிர்...?!


திமிர்...?!

"நாங்கள்
வீசும் காற்றுக்கு
எதிராய் சலசலக்கும்
சருகுகள்...
திமிர் பிடித்து
மெளனிக்கும் - நீ
யார்?"

"நான் ஒரு
சாதாரண
மலர்!"

                                                                                              - தாகூர்
                                                                                                (தமிழில் - ரவிஜி...)
                                                                                                (புகைப்படம் - ரவிஜி)

இளக்கா(ம)ரம்...!?




புகைப்படம் : நன்றி கூகிள் .