வண்ணத்துப் பூச்(சு)சி…!
காலையில் கல்லூரி…
கிளம்பும் ‘முன்’ கோபம்
மாலையில் மீதமென –
முறுக்கிய முகம்…
மீறிப்பீறிடும் ...
முறுவலாய் மாறிட,
‘அப்ப்ப்பா…!’ என்று
என் கழுத்தினில் மாலையாகி
கன்னத்தில் பதிந்திடும்
சென்னிற முத்தங்கள்
… … … … … …
மயங்கிடும் மாலையில்
சாலையில் நடக்கையில்
கன்னத்தில் வண்ணமேற்றும்
வண்ணத்துப் பூச்சிகள்…!
ரவிஜி…
புகைப்படம் : நன்றி கூகிள் !
வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றி வண்ணமயமான கவிதை அருமை!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)
வரவிற்கும்...கருத்து தெரிவிற்கும் நன்றி...! ரவிஜி...
ReplyDelete
ReplyDeleteவண்ணத்துப் பூச்(சு)சி…! வண்ணமயமாய் சிறகடிக்கிறது ....