பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல் கலாம்
தோற்றம் :
15.10.1931
மறைவு : 27.07.2015
கலாமுக்கு
ஒரு சலாம்!
‘முதல்’
ஏதுமின்றி பிறந்த நிலை
முதல் குடிமகனாய் வளர்ந்த ‘தலை’!
மதங்களைக் கடந்தும் நீர்
நின்றீர்
மக்கள் மனதை நிதம் வென்றீர்!
எளிமை என்னும் சொல்லுக்கே
அர்த்தம் தந்த ஓர் அடையாளம்!
விண் ராக்கெட் அனுப்பிய
விஞ்ஞானி
பண் மாணவர் மனதில் மெய்ஞானி!
நீர் கனவு கண்டிட
அழைத்திட்டீர்
பார் இளைஞர் உயர்ந்திட
உழைத்திட்டீர்!
சோர்வுக்கும் சோர்வினை
தந்துவிட்டு
இ(உ)றுதி நாளிலும் உம்
உழைப்பு!
விண்ணில் பறந்திருக்கும்
ராக்கெட்டு
கண்ணீர் உதிர்க்கும் இதைக்
கேட்டு!
இந்தியத் தாய்க்கு இனிக்கும்
மகன்
பூமியின் மடியில்
பு(வி)தைக்கும் நாள்!
விதைகள் விதைப்பது யதார்த்தம்தான்
ஆல விருட்சம் விதைப்பது இங்கேதான்!
காலத்தை வென்றுவிட்ட கலாம்
ஐயா
ஞாலத்தின் மனந்தொட்ட சலாம்
ஐயா!
ரவிஜி---
(பட உதவி :
நன்றி கூகிள்)