Friday 4 August 2017

அக்க(றை)ரை!

அக்க(றை)ரை!
நல்லதென உனக்கு - நான்
சொல்லும் சமயமெல்லாம்
நீ அதை செய்தாயா – என்று
என் சொற்களை எதிர்மறுத்து
இளக்கரிக்கும் என் மகனே…,
தொட்டால் சுடும் நெருப்பு;
பட்டால் வெட்டும் கத்தி;
வாயால் ப()ழிக்கும் பேச்சு!
சொன்னால் புரிந்து கொள்…
இல்லை நீயாக அறிந்துகொள்..
நானுனக்கு சொல்வதெல்லாம்
காலத்தால் உணர்ந்த உண்மை.
பயிற்சி அளிப்போரெல்லாம்
சாதித்திருக்க அவசியமில்லை
சொல்வது – அறிவுரையல்ல;
பெற்ற மகனென்ற - அக்கறை.
ரவிஜி…
(பட உதவி - நன்றி கூகிள்)

11 comments:

  1. நன்றாகவே சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி நண்பரே. தங்களின் வருகை, கருத்து - இனிப்பு!

      Delete
  3. அற்புதமான அறிவுரை ஆனால் இன்றைய இளைய தலைமுறைகள் ஏற்பதில்லை என்பது வேதனையே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!உண்மைதான். அக்கறையும்கூட புரிவதில்லை. ஆனால் இது எனது தந்தை எனக்கு கூறியவற்றில் நான் எடுத்துக்கொண்டு நன்மை அடைந்த விஷயங்களையும், அலட்சியப்படுத்தியதால் சிலவற்றில் சிறு துன்பங்கள் அடைந்ததையும் நினைவுபடுத்திப்பார்த்ததால் எழுதியதேதான் இது.நன்றி..

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அக்க(றை) கவிதை - சர்க்கரை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரை...காணக்கிடைத்ததோ தாங்கள் என்பால் கொண்ட அக்கறை!!

      Delete