Wednesday 29 April 2015

கறுப்பு – வெள்ளை!


கறுப்பு – வெள்ளை!
அரிதாரம் - பூச்சு இல்லை
அல()ங்காரம் ஏதுமில்லை!
பொன்னகை – இல்லையில்லை
புன்னகை – எல்லையில்லை!
கறுப்பு – ‘உண்மை’ நிறம்
வெண்மை அவளின் மனம்!
கண்கள் இதயம் காட்டும்
பெண்மை திறத்தின் நீட்டம்
இதயத்தை நிறைக்குமிவள்
என்றும் – என் செல்ல மகள்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

Monday 27 April 2015

மடி…



மடி…
காசின் பொருட்டு
நாசம் செய்திடும்
வேஷம் கட்டும்-
தோஷம் விட்டிடு!
குழந்தை போலும்-
பாசம் கொள்ளும்
மனம் படைத்தால்,
பசுவின் மடியும்
பசியை ஆற்றிட
பாலினை சுரக்கும்…
புலியின் மடியும்
கண்துஞ்சிட ஓர்
இடம் கொடுக்கும்!
ரவிஜி---
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)

Tuesday 21 April 2015

த(க)ண்ணீர்?!


த()ண்ணீர்?!
உள்ளே ‘தண்ணீர்’ ஊற்றி-
வெளியில் ஊ(நா)றிக் கிடக்க,
கடந்து செல்லும் நிழலும்-
கால் செருப்பால் இடறும்!
ரவிஜி---
(பட உதவி : நன்றி கூகிள்)

Thursday 9 April 2015

உலைக்களம்!

உலைக்களம்!
வறுமை எனும் கொடுமை-
வயிற்றினில் தீ எரிக்க
துள்ளியோடும் சிறுவயதில்
பள்ளிக்கூடம் நீ சென்று
பாடங்கள் படித்தறிய-
முடியாத உன் சோகம்?
இரும்பென அசையாத
இதயம் கொண்டிருந்தால்
அனுபவப் பாடந்தரும்
வாழ்க்கை உலைக்களம்
புடம்போட்ட தங்கமென
உன்னை - ஒளிரச்செய்யும்;
நிரந்தரப் புன்னகையில்
முகம் மிளிரச் செய்யும்!
ரவிஜி---
(புகைப்படம் – நன்றி கூகிள்)

நம்பிக்கை வி(ளி)ளம்பு!


நம்பிக்கை வி(ளி)ளம்பு!  
சறுக்கலில் சோர்ந்திடாது,
தோல்வியின் எல்லைவரை-
நம்பிக்கை பேர்ப(பி)டித்தால்
விளிம்பிலும் வேர்பிடிக்கும்!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)

Wednesday 1 April 2015

ஆ(க்)கச் சிறந்த கவிதை!


ஆ(க்)கச் சிறந்த கவிதை!
கண்ணுறும் பல காட்சிகள்
செவிமடுக்கும் சில வார்த்தைகள்
என் இதயத்தின் உள்ளோடி-
வரிகளாய் வடிவம் கொள்ளும்!
காலங்கள் கொஞ்(சு)சம் கடந்து
மீண்டும் நான் (சு)வாசித்திட-
வார்த்தைகள் மாற்றம் வேண்டும்!
வந்து விழுந்த வார்த்தைகள்-
மாற்ற(ப்)ம் பெற்ற எழுத்துகள்
எது மேலென அறிவு கேட்கும்.
“ஆ(க்)கச் சிறந்த கவிவரிகள்
இனிதான் நீ எழுத வேண்டும்”
இளக்கரிக்கும் - என் இதயம்!
ரவிஜி…
(பட உதவி: நன்றி கூகிள்)