Saturday 9 May 2015

கு(கொ)டை!


கு(கொ)டை!
இயற்கை சிந்திடும்
மழை தவிர்த்திட
குடை கொடுத்திட்டு
தான் நனைந்திடும்…
பாச மழையதனை
வற்றாத உள்ளமதால்
தினம் பொழியும்
கொடை வள்ளல்!
ரவிஜி---
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(முன்னறி தெய்வமாம் அன்னையர்க்கு சமர்ப்பணம்)

Friday 8 May 2015

‘வளரும்’ பருவம்!


‘வளரும்’ பருவம்!
குழந்தைப் பருவத்துப் பாசம்…
நெஞ்சிலே ஒட்டிக் கொள்ளும்!
வளரும் பருவம் வந்துற–பெரு(று)ம்
‘கொம்பென’ முட்டிக் கொள்ளும்.
ரவிஜி…
(புகைப்படங்கள் – ரவிஜி)
(நான் குடியிருந்த வீட்டின் எதிரிலேயே
இரண்டு படங்களையும் எடுக்க வாய்த்தது!!!)

Wednesday 6 May 2015

உ(வெ)ள்ளம்

உ(வெ)ள்ளம்
பேதங்கள் ஏதுமின்றி
அ()ள்ளிச் செல்லும்
காலம் - வெள்ளம்?!
தன் உயிர் கருதாது-
மகளுயிர் காத்திடும்,
ஈடில்லா தாயுள்ளம்!
ரவிஜி---
(படம்: நன்றி கூகிள்)

Tuesday 5 May 2015

கை-வண்ணம்!!!


கை-வண்ணம்!!!
துச்சமென எண்ணி
கிள்ளி வீசும் நகமும்
வண்ணமாய் மின்னும்
மகளின் - கைவண்ணம்!
ரவிஜி---
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)