Friday 29 August 2014

திரு-நங்கைய(யா)ர்???


திரு-நங்கை(யா)ர்???
உடன் பிறந்தும் தங்கைக்கு -
ஆருயிர் அண்ணனில்லை;
என் அருமை தம்பிக்கோ- நான்
ஆசை ‘அக்கா’வுமில்லை?
பெற்றெடுத்த தாய்க்கு நான்
உற்ற தலை ‘மகனி’ல்லை;
பேர்கொடுத்த தந்தைக்கு நான்
ஊர் போற்றும் ‘மகளு’மில்லை!
பெண்மை உணர்வு கொண்டும்-
‘செல்வி’ மரியாதை கிட்டவில்லை;
‘திருமதி’ பட்டமும் எட்டவில்லை?!
செல்லுமிடம் ஏதும் அற்றுப்போனேன்
காய்ந்த கள்ளியென - இற்றுப்போனேன்?
கொக்கரித்து தி()னம் நி(வி)ற்கும்
மனம் வக்கரித்த வீணர்களால்
வக்கற்று - விக்கித்து நிற்கின்றேன்?
படாது சில்லரை - சுண்டும் சில விரல்கள்;
என் நெஞ்சம் சிந்தும் - குருதிப் பரல்கள்!
நட்பாய் நான் தரும் புன்னகையும்-
கைப்பாய் திரும்பி >> வரும் ‘ஏளனமாய்’?
தேடித்தேடி அலைவதோ - மனித நேசம்;
எனக்கென இறுதியாய் உற்றதோ-
தலையணை உறையான சேலையில்
‘பெற்ற’ என் - அம்மாவின் வாசம்!
ரவிஜி---
(புகைப்படங்கள் - நன்றி கூகிள்)

(திருநங்கையரும் நம்மைப்போன்ற மனிதப்பிறவிகள்தாம்! வெகுசிலரே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளபோதிலும் மற்றவர்கள் நிலை…? பெண்மை உணர்வு மேலிட்டிருக்கும் இவர்களை சகோதரியாகவோ அல்லது தாயாகவோ நினைக்காது, தீண்டத்தகாதவர்களாக இளக்கரித்து ஒதுக்கி ஓரங்கட்டும் மனிதர்களே அதிகம்! அந்த சகோதரிகளின் மனநிலை என்ன பாடுபடும்! சில நேரங்களில் அவர்கள் வெளிப்படுத்தும் சமுதாயத்தின் மீதான கோபம்கூட ஓரளவு நியாயமானதாகத்தான் தொன்றுகிறது! அவர்களையும் மனிதாபிமானத்தோடு நடத்துவோம்! அன்பான, ஆதரவு கலந்த வார்த்தைகளையாவது அவர்களுக்கு நாம் அளித்து அவர்களின் தீராத மனக்குமுறலை குறைக்க முயற்சிப்போம்! அந்த சகோதரியருக்கு இது எனது சிறு அர்ப்பணம்!)

(திரு. ரூபன் அவர்கள் அறிவித்துள்ள தீபாவளி-2014 கவிதைப்போட்டிக்கான விரும்பிய தலைப்பில் கொடுத்துள்ள போட்டிக் கவிதை இது)

தமிழச்(சி)சு ஓவியம்!


தமிழச்(சி)சு ஓவியம்!
நெற்றியில் பொட்டு வைக்கும்
பழக்கம் - விட்டுப் போனது!
பட்டான கட்டுக் கூந்தல் ‘கட்’ ஆகி
லூஸ்  ஹேர் - ‘ஸ்டைல்’ ஆனது!
ஜீன்ஸ் டாப்ஸ் ஷு அணிந்து
கோக்குடன் – பீஸா,பர்கர்,பாஸ்தா!
‘முகநூலி’ல் முகம் மறைத்(ந்)து
மாமா, அத்தை, சித்தப்பா- என
கொஞ்ச(சு)ம் சொந்தம்கூட விட்டு
அமெரிக்க சாப்ட்-வேர் இ()னிமையோ
என ச(சு)ற்றுப்புற நிலை மய(க்)ங்கும்!
மாறா அகம் சொச்சமாய் நா(வீ)டு திரும்ப-
சில்லறையாய் சேர்த்து அப்பத்தா வாங்கிய
ஆசை - மங்கல மஞ்சள் புடவையோடு
கூவிப் பூவிற்கும் ‘அம்மா’வின் கூடை
‘கட்டு’ப்பூவோடு வளைக்கரம் இடைநிறுத்த-
முகத்திலும் கொஞ்()சும் மஞ்சள் எ(ன்)ன;
நெற்றியில் பொட்டோடு திருநீறு மின்ன;
தொங்கும் குடை ஜிமிக்கிகள் கா(த்)தாட
தலையில் மண()க்கும் மல்லிகை!
நெஞ்சில் நிறைந்த உய(யி)ர் ஓவியத்தை
அமெரிக்க காமராவில் அப்பா ப(பு)டம் போட
மெல்லிய நாணச் சிவ(ரி)ப்பாய் - வேர்களால்
மீண்டு(ம்) மலர்ந்தாள் - தமிழச்சியாய்!
ரவிஜி---
(திரு. ரூபன் அவர்கள் நடத்தும் தீபாவளி - 2014 கவிதைப்போட்டியில் கொடுக்கப்பட்ட படத்திற்கான எனது முதல் போட்டிக்கவிதை இது!) 

 தீபாவளி 2014 கவிதைப்போட்டிக்கான இரண்டாவது கவிதை -

திரு-நங்கைய(யா)ர்??? அதற்கான இணைப்பு கீழே

http://mayavarathanmgr.blogspot.in/2014/08/blog-post_29.html 

Tuesday 19 August 2014

க(ந)னவு!


பீட்டில்ஸ் குழுவின் புகழ்பெற்ற பாடகர் “ஜான் லென்னன்” அவர்கள் பாடிய உன்னதப்பாடல்! மனித நேயம், சகோதரத்துவம், பொதுவுடமை என்று பலவற்றையும் பிரதிபலிக்கும் உன்னதப்பாடல்! அதனை தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன்! படித்துவிட்டு பாடலையும் கேளுங்கள்!
 
க()னவு!
கனவு!
மெய்ப்பட ஒரு – கனவு
வேண்டும் உனக்கு!
சொர்க்கம் ஏதுமில்லை;
மேலே – வானம் மட்டும்;
கீழே நரகமுமில்லை.
 கனவு!
மக்களின் சிந்தையில்-
இன்றைய தேவை மட்டும்!
நாடென்று ஏதுமில்லை,
கொலைகள் ஏதுமில்லை;
கொல்லப்பட காரணங்கள்
காணக்கிடைக்கவில்லை!
‘மதங்’களும் இல்லை!
 கனவு!
மக்கள் அனைவர்க்கும்
அமைதியான வாழ்க்கை!
நீ இளக்கரிக்கலாம்
அது பகல் கனவென்று!
எப்படியும் எண்ணங்கள்
ஒன்றோடு ஒன்றாகும்!
உலகம் ஒன்றுபட்டதாகும்!
 கனவு!
தனியுடமை இல்லையென!
எனது நம்பிக்கை
அது சாத்தியமென்று!
பசிக்கும் பொறாமைக்கும்
வாய்ப்புகள் ஏதுமில்லை!
மனிதரிடையே எங்கும்
நிலவும் - சகோதரத்துவம்!
 க()னவு!
மனித இனம் அத்தனையும்
பூவுலகை பகிர்ந்துகொள்வதாய்!
நீ எள்ளிடக்கூடும்
நான் கனவில் மிதப்பதாய்!
நானொன்றும் தனியனல்லன்
என்றேனும் உன் எண்ணம்
ஒருமித்து ஒன்றாகும்!
உலகம் - ஒன்றுபட்டதாகும்!
(பாடலை இயற்றிப்பாடியவர் – ஜான் லென்னன்!)
தமிழில் –  எம்ஜிஆர்---

Friday 15 August 2014

ந(டி)டப்பு!



HE WHO IS TOO BUSY DOING GOOD
HAS NO TIME TO BE GOOD!
(Tagore – Stray Birds)
ந(டி)டப்பு!
நன்மை செய்வதில்
உண்மை கவனம்!
நல்லவனாய் ‘நடித்திட’
எனக்கில்லை நேரம்!
தமிழில் MGR---
(படங்கள் – நன்றி கூகிள்/VGK)

Sunday 10 August 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!


மதிப்பிற்குரிய வாத்தியார் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK – 28 வாய் விட்டு சிரித்தால்
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை
மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-28 வரை கலந்துகொண்ட
 16 போட்டிகளில் நான் பெறும் பதிமூன்றாம் பரிசாகும்! அத்தோடு இந்த போட்டிகளில் நான் பெற்றுள்ள மூன்றாவது தொடர் முதல்பரிசுமாகும்!
உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திர வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு
மூலையில் கிடந்த எனக்கும் வெற்றிபெறும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK – 28 வாய் விட்டு சிரித்தால்
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR

Sunday 3 August 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!


மதிப்பிற்குரிய வாத்தியார் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 27 – அவன் போட்ட கணக்கு 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
 முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை
மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-27 வரை கலந்துகொண்ட 15 போட்டிகளில் நான் பெறும் பன்னிரண்டாம் பரிசாகும்! அத்துடன்
இது மூன்றாம் ஹாட்ரிக் வெற்றியுமாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திர வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு
மூலையில் கிடந்த எனக்கும் வெற்றிபெறும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த
 நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய நன்றிகள்!
VGK 27 அவன் போட்ட கணக்கு 
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR