Sunday 23 March 2014

கெ(கே)ட்ட நன்றி!?





கெ(கே)ட்ட நன்றி!?
நன்றிக்கு அடையாளம்-
காவல் செய்த காலமதை
நினைவில் கொள்ளாது
முதுமை எனை வாட்ட
வீதிக்கு விரட்டிவிட்டார்
நன்றிகெட்ட மாந்தரிவர்!
ரவிஜி…
 (புகைப்படம் : ரவிஜி)

Tuesday 18 March 2014

நூலைப் போல……!



நூலைப் போல……!
தானும் சிறு பிள்ளை
என்றான போதிலும்
தாயைப் போலாகும்
பாசத்தின் சி(சே)லை!
ரவிஜி…
(புகைப்படங்கள் – நன்றி கூகிள்)

Saturday 15 March 2014

ஒரு(க்)காலும் இல்லை!



ஒரு(க்)காலும் இல்லை!
கால் ஒன்றை இழந்தாலும்
காலனை நாடவில்லை.
நடப்பதில் உண்டு சிரமம்;
என்றாலும் கிடந்திடாது
நல்வழியே நடந்(த்)திடும்
இவரின் 'வைர' மனத்திடம்.
உடல் மாற்றுத் ‘திறனா’ளி
மனமோ மாறாத உழைப்பாளி!
ஊன்று(ம்)கோலும் சுழற்றும்
ஓ(ட்)டும் வண்டியின் சக்கரம்.
நெஞ்சுரத்தில் ஓ(ட்)டிடும்
தன் வாழ்க்கை சக்கரம்.
ஓடி ஓடி உழைத்திடவே
இரு கால் இவர்க்கில்லை
உழைக்காமல் ‘ஓட்டு’வதா?
ஒரு(க்)காலும் இங்கில்லை.
ரவிஜி..
(புகைப்படம் – நன்றி கூகிள்)
(உங்களின் தன்னம்பிக்கைக்கும் மன திடத்திற்க்கும்
தன்மானத்திற்கும் தலைவணங்குகிறேன் அண்ணா)

Friday 14 March 2014

பிரிவு…?!

பிரிவு…?!
பார்பி டால் குட்டிக்கு-
பிரிந்திடவே முடிவதில்லை-
பிள்ளை போல் செல்லம்
டெட்டி பியர் பொம்மையும்
எல்லை நாடிச் செல்லும்
டாடி சோல்ஜர் தம்மையும்!
ரவிஜி…
(புகைப்படம் – நன்றி கூகிள்)

Thursday 13 March 2014

கோலாகலக் கோ(கா)லம்!


கோலாகலக் கோ(கா)லம்!
கண்ணைக் கவர்ந்திடும்
வண்ண மலர் கோலமென
இளமைக் கோ(கா)லம்!
புது வண்ணக் கோலத்தின்-
மேல் உ(ல)திர்ந்த இலைகள்…
காட்டும் காலத்தின் கோலம்!
ரவிஜி…
(புகைப்படம் : ரவிஜி)

குப்(ட்)பைக் காகிதம்!

குப்(ட்)பைக் காகிதம்!
காற்றின் திசை
சாதகமானால்
குப்பைக் காகிதம்
‘கூட’ கோபுரம்
நாடிப் பறக்கும்…!
ரவிஜி…
(புகைப்படம் : ரவிஜி)

ப(பி)ஞ்சு மிட்டாய்…!


ப(பி)ஞ்சு மிட்டாய்…!
காலத்தின் பரிசாய்
பஞ்சாய் நி(தி)றம்
மாறிய தலை…!
ப(பி)ஞ்சு மிட்டாய்
ருசிக்கும்… ‘நிறம்’
மாறாத நிலை…!
(புகைப்படம் : ரவிஜி)
(பஞ்சு மிட்டாய் ருசிக்கையில் என் ‘கிளிக்’கில்
சிக்கிய புதுவை லெனின் பாரதிக்கு நன்றி)


Saturday 8 March 2014

வ(எ)ண்ண ப(ச)கடைகள்!

வ()ண்ண ப(ச)கடைகள்!
தன் கரங்களின்
சுழற்சி விதியில்
மனிதன் தன்னையே
சிக்கிடச் செய்யும்-
கண்ணைக் கவரும்
வ()ண்ண ப()கடைகள்!
ரவிஜி…
(புகைப்படம் – நன்றி கூகிள்)

Friday 7 March 2014

வானமே எல்லை!












வானமே எல்லை!
கசக்கிக் கட்டவும் வழியின்றி-
கந்தலாகிப் போன உடுக்கை…
மூன்று வேளை வழியில்லா
தட்டில் சோற்றுப் பருக்கை!
தன் வயிற்றுத் தீயார திரட்டிய
காகிதக் குப்பையில் படுக்கை!
காணும் கனவிலோ அரசன் -
தங்கத்திலே உண்டு இருக்கை!

ரவிஜி…!
(புகைப்படம் : ரவிஜி)

Thursday 6 March 2014

எங்கெங்கு காணினும்…!!!


எங்கெங்கு காணினும்…!!!
எங்கும் என்றும் எப்பொழுதும் எல்லோரையும்
அன்பு செய்ய வேண்டும் - இறைவனுக்கு நிர்பந்தம்!
தன் பொறுப்பில் என்றும் சறுக்காதிருக்கவே
ஆண்டவன் அனுப்பி வைக்கிறான் அம்மாக்களை
அம்மாக்கள் மகள் உருவமாய் பிறக்கிறார்கள்
அம்மாவாகி… அம்மம்மாவாகி… பெண்தெய்வமென
எங்கும் நிறைந்து அருவமாகியும் காக்கிறார்கள்!

ரவிஜி...
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(வானின்று எனை வாழ்த்தும் என் இரு அருமைத்தங்கைகளுக்கும் எனது அம்மம்மாவுக்கும் மகளிர் தினத்தில் எனது அர்ப்பணம்)