Showing posts with label வேர்கள். Show all posts
Showing posts with label வேர்கள். Show all posts

Friday, 29 August 2014

தமிழச்(சி)சு ஓவியம்!


தமிழச்(சி)சு ஓவியம்!
நெற்றியில் பொட்டு வைக்கும்
பழக்கம் - விட்டுப் போனது!
பட்டான கட்டுக் கூந்தல் ‘கட்’ ஆகி
லூஸ்  ஹேர் - ‘ஸ்டைல்’ ஆனது!
ஜீன்ஸ் டாப்ஸ் ஷு அணிந்து
கோக்குடன் – பீஸா,பர்கர்,பாஸ்தா!
‘முகநூலி’ல் முகம் மறைத்(ந்)து
மாமா, அத்தை, சித்தப்பா- என
கொஞ்ச(சு)ம் சொந்தம்கூட விட்டு
அமெரிக்க சாப்ட்-வேர் இ()னிமையோ
என ச(சு)ற்றுப்புற நிலை மய(க்)ங்கும்!
மாறா அகம் சொச்சமாய் நா(வீ)டு திரும்ப-
சில்லறையாய் சேர்த்து அப்பத்தா வாங்கிய
ஆசை - மங்கல மஞ்சள் புடவையோடு
கூவிப் பூவிற்கும் ‘அம்மா’வின் கூடை
‘கட்டு’ப்பூவோடு வளைக்கரம் இடைநிறுத்த-
முகத்திலும் கொஞ்()சும் மஞ்சள் எ(ன்)ன;
நெற்றியில் பொட்டோடு திருநீறு மின்ன;
தொங்கும் குடை ஜிமிக்கிகள் கா(த்)தாட
தலையில் மண()க்கும் மல்லிகை!
நெஞ்சில் நிறைந்த உய(யி)ர் ஓவியத்தை
அமெரிக்க காமராவில் அப்பா ப(பு)டம் போட
மெல்லிய நாணச் சிவ(ரி)ப்பாய் - வேர்களால்
மீண்டு(ம்) மலர்ந்தாள் - தமிழச்சியாய்!
ரவிஜி---
(திரு. ரூபன் அவர்கள் நடத்தும் தீபாவளி - 2014 கவிதைப்போட்டியில் கொடுக்கப்பட்ட படத்திற்கான எனது முதல் போட்டிக்கவிதை இது!) 

 தீபாவளி 2014 கவிதைப்போட்டிக்கான இரண்டாவது கவிதை -

திரு-நங்கைய(யா)ர்??? அதற்கான இணைப்பு கீழே

http://mayavarathanmgr.blogspot.in/2014/08/blog-post_29.html