Saturday 5 January 2013

வரு'மானம்'

வரு'மானம்'...!

கொஞ்(ச)சும் வயது
பிஞ்சு மகன்
பசியே அறிவான்...
அன்றி - அவன்
விற்றிடும்
பஞ்சு மிட்டாய்
ருசிக்கமாட்டான்.
வந்திடும் வரு'மானம்'
குறையுமென்று.

                      ரவிஜி...
புகைப்படம்: நன்றி கூகிள்.


Wednesday 2 January 2013

நா(வா)க்கு...!

நா(வா)க்கு...!

நேற்று ஒன்றும்
இன்று மற்றொன்றும்
நாளை வேறுமாக
நிலையின்றி உழற்றும்.

நண்பன் எனப் பேசும்,
விரொதியாய் மகிழும்.
லாபமே குறியாய் வாழ்த்தும்
இல்லையானால் வீழ்த்தும்.

நுனியில் இனிப்பை உணரும்
அடியிலோ கசப்பையே உணர்த்தும்.
நல்லவர்க்கும், வல்லவர்க்கும்
மற்றவர்க்கும் ஒன்றுபோல் தோன்றும்
நோக்கின்றி சுழலும் நாற்புறமும்...

பயன்படுத்துவோரையே
பழியிலும் மாட்டும்,
பாழாக்கும் - நா(வா)க்கு.

                                ரவிஜி...

புகைப் படம் : நன்றி கூகிள்.

 

Tuesday 1 January 2013

சுழற்சி...!


சுழற்சி...!

பாலமாயிருந்து...
பாரம் சுமந்தும்,
வீசியெறிந்திட்ட
வெற்றுச்சுமையாய்...
பழைய இரும்பு
வியாபாரியின்
சைக்கிள் கேரியரில்
எடைக்கு வாங்கிய
சைக்கிள்...!

                           ரவிஜி...

புகைப்படம் - ரவிஜி...
(இடம் : புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை)

இடம்

இடம்...!

மனதில் இடம்
கொடுத்த
குட்டிப் பாப்பாவுக்கு
இ(அ)டம் பிடிக்கும்...
குரங்கு-
பொம்மை!

                 ரவிஜி...


புகைப்படம் - ரவிஜி