Wednesday 22 May 2013

பயன்பாடு…!

பயன்பாடு…!
சிறகொடிந்த
வண்ணத்துப் பூச்சி…
பறக்கமாட்டாமல்
வந்தமர்ந்ததோ-
தரையிறங்கிட்ட
பறவைக்கூடு!
உதவிக்கு வந்திடுமா-
உதிர்ந்திட்ட
பறவைச் சிறகு…?
               ரவிஜி…
(புகைப்படம் - ரவிஜி...)

Thursday 9 May 2013

பரிட்சை…?!

பரிட்சை…?!
வெற்றியைத் தொட்டவர்
உயர்த்திடும் விற்புருவம்…
விட்டவர் விழியோரம்
துளிர்த்திடும் துளிஈரம்…
தொட்டிட்ட வெற்றியோ
சிகரத்தில் சேர்க்கும்…
வீழாமல் இருந்திட
தேவை நல் நிதானம்.
இடரிடும் தோல்வி
பாதாளம் காட்டிடும்…!
என்றாலும் வென்றிட
உன்னை அது உசுப்பிடும்…!
தோல்வியும் வெற்றியின்
மற்றுமோர் அறிகுறி
உணர்ந்து நடக்காதவன்
தேறாத தற்குறி!
ரவிஜி…
                                               (புகைப்படம் : நன்றி கூகிள்)

Wednesday 8 May 2013

'வேர்'வை...



‘வேர்’வை…!
மகளுக்கு
சாப்ட்’வேர்’
படிப்பு…
தந்தையின்
‘ஹார்ட்’
‘வேர்’வை
உழைப்பு…!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)

Sunday 5 May 2013

நான்...?!


நான்…!
நியாயமற்றதாய்
என் மீது எவரும்
குற்றம் சாட்டிட
கள் குடித்த,
குரங்கெனத் துள்ளி,
தேளாய் திருப்பி
கொட்டிடும் என் மூளை!
பாசத்தால் – யாரும்
அரவணைத்தாலும்
நேசத்தில் ஊறிய
வார்த்தை தந்தாலும்
கண்ணீர்த் துளிகளால்
நன்றி சொல்லிடும்
மவுனமாய்
என் – இதயம்…!
… … … … …
நாவும் உதடுகளும்
மூளையின் கருவிகள்.
கண்களோ - இதயத்தின்
வாசற் கதவுகள்.
ரவிஜி
(படம் : நன்றி கூகிள்)

புது டில்லி…

புது டில்லி…
சு'தந்திர' கா(நா)ட்டில்
துள்ளித் திரியும்
புள்ளி மான்கள்…
துவண்டு மருளும்
மழலை மாறாது
மான் குட்டிகள்…
பேதம் பாராது
எச்சில் சுரக்க-
ரத்தம் சுவைக்கும்,
காட்டுப் புலிகள்.
குதறும் பற்களை
சிதற அடித்தால்-
நீளும் நாக்கினை
வெட்டி எறிந்தால்-
ஆடும் வாலினை
அறுத்து வீசினால்-
துடிக்கும் துப்பாக்கியால்
வெடித்துக் கொன்றால்-
ஆடும் புலிகளின்
ஆட்டம் – ஓயும்.
ரவிஜி…
(புகைப் படம் - நன்றி கூகிள்)

மஞ்சள் (கண்) நீர்…

மஞ்சள் (கண்) நீர்…
அப்பா வாங்கித் தந்த
முதல் கைக்கடிகாரம்…
ஆத்தா சுட்டுத்தந்த
அதூரக் குழிப் பணியாரம்…
அம்மா எனக்கு அணிவித்த
முத்()து மணியாரம்...
குழந்தைப் பருவம் தொலைத்த
சோகம் என் விழியோரம்…
ரவிஜி…
(புகைப் படம் : கூகிளுக்கு நன்றி)

அம்மா...!

அம்மா!!!
கட்டைக் கால் மடியும்
மெத்தையெனவே உணரும்…
பசியாற வக்கின்றி
கால் விரல் சூப்பும்…
பிள்ளையின் பரிதவிப்பு!
காலில்லை என்றாலும்
பாலின்றிப் போனாலும்
காலமுண்டு என்றுணர்த்தும்
அம்மாவின் அரவணைப்பு…!
ரவிஜி…