Wednesday 30 September 2015

மண(ன)க்கோலம்…!



மண()க்கோலம்…!
தொங்கும் தோரண விளக்கோடு
வைத்த பெரும் பிளக்ஸ் போர்டு!
கைகூப்பி தலையாட்டி வரவேற்க
வார்த்தையில்லா ஓர் பொம்மை!
மின் விசிறியாய் சுற்றிச் சுழலும்
இயந்திரம் பன்னீர் தெளிக்கும்!
நாம் பேசுவது நமக்கே கேளாது-
உரக்கப் பாடும் ஆர்க்கெஸ்ட்ரா!
உபசரிக்க ஆளின்றி இலை நிறைய
‘கொட்டும்’ பலவகை பகட்டு உணவு!
வந்த அன்பளிப்பை பெயர் மாற்றி
வண்ண உறைமூடி எடுத்துவ()ரும்;
கைகுலுக்கிப் பிரிந்து செல்லும்-
காகிதப்பூ நே(வா)சமாய் இக்காலம்!
உற்றஅண்ணன் தங்கைகளோடு
தெருவடைத்து ஒரு பந்தலிட்டு
தோரணங்கள் பல தொங்கவிட்டு
சாதி மத பேதமின்றி ஒன்றாய்-
ஒரே உலை ஒன்றே சோறென
ஓரிடத்தே ஒன்றுகூடி உ()ழைத்து
பெற்ற மகளெனவே வரித்து
தொங்கும் மஞ்சள் கயிற்றோடு
துள்ளும் மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளையொடு அனுப்பிட்ட
அக்காலமே எ()ன்றும் பொற்காலம்!
                                                                       ரவிஜி---
                      (புகைப்படங்கள்: நன்றி கூகிள்)
(வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிமித்தமாக நடத்தப்படும் கவிதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)

4 comments:

  1. அருமை கவிஞரே மிகவும் ரசித்தேன் ஆம் அதுவே பொற்காலம் இன்று அலங்கோலமே.... போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகள் தமிழ் மணம் 1
    எமது போட்டி கவிதையையும் காண வருக....
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே! வருகிறேன்!

      Delete
  2. தமிழ் மணம் இணைய மறுக்கிறதே...

    ReplyDelete
  3. அருமை....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete