Saturday 10 May 2014

ஆ(கா)தாரம்!

ஆ(கா)தாரம்!

தெருவெங்கும் தேடித்தேடி
திரட்டித் தட்டிய வரட்டிகள்,
ஒட்டிய பாழ் வயிற்றுக்கு-
ஆகாரத்தின் ஆதாரமாகும்!
பணத் தட்டில் தடுமாறும்-
‘ஆதார’ச் சுவற்றுக்கும்
                  சுவரொட்டிய வரட்டிகள்                  
அலங்கார அரிதாரமாகும்!
ரவிஜி...
(புகைப்படம் : ரவிஜி…)

5 comments:

  1. நன்கு எரியும் காய்ந்த வரட்டி போன்றே, பற்றி எரியும் ஏழ்மையைச் சித்திரிக்கும் சிறந்த ஆக்கம், .

    ReplyDelete
  2. சொன்னவிதம் அருமை... உண்மை...

    ReplyDelete
  3. நல்ல கவிதை....படமும் நன்று.

    ReplyDelete