Saturday 12 July 2014

நி(ல்)லாச்சோறு!


நி(ல்)லாச்சோறு!

நீர் தேங்கிய ‘நிலை’யில்
ஓரிடத்தில் மூழ்கி,
நீந்தி – வேறிடத்தில்
தலை நீட்டும்
கு(சு)றும்பு வயது!
வானில் ஓரிடத்தே
மேகத்திரையில்
ஓடி மறைந்து,
வேறோர் இடத்தில்
திரை – விலக்கி
முழு முகங்காட்டும்
குளிர்ந்த நிலவு!
வளர்ந்து –> தேய்ந்து
தேய்ந்து –> வளரும்
சுழற்சியில் நிலவு!
இன்றைய இரவில்-
பசியின் முடிவில்…
நிலவில் – மனது!
ரவிஜி…
(புகைப்படங்கள்: 1. கங்கையிலும், 2. காரஞ்சன் வலைப்பூவில் நன்றியுடனும் ‘சுட்டது’ – ரவிஜி…)

11 comments:

  1. நிலவின் குளிச்சியில் எழுதியதோ..
    படிக்கும்போது மகிழ்ச்சியும்...
    மனதுக்கு நெகிழ்ச்சியாகவும்
    இருக்கிறது கவிதை அருமை.

    ஐயா தற்போதைய எனது ''ஹிந்தமிழ்'' படிக்க...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே! வருகிறேன்....!

      Delete
  2. தலைப்பும், கவிதை வரிகளும் முழுநிலவென என்றும் மனதில் நிற்கும் படியாக அழகோ அழகாக உள்ளன ! பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க 'வாத்யாரே'! மிக மிக நன்றி!

      Delete
  3. பவுர்ணமி அதுவுமாக இன்று தங்களின் இந்த கவிதையை படித்தேன். உண்மையில் நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவம் ஏற்பட்டது.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  4. நிலாச் சோறு சாட்பிட்டதுபோல் உள்ளது
    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. நிலவுத் தட்டில் நிலாச்சோறு உண்ட பரவசம்
    நிலவும் அருமையான கவிதை ..பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரயில் போல நிலவும் எந்த வயதிலும் ரசிக்கும் விஷயம்தானே! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete