Wednesday 23 April 2014

‘செல்லும்’-‘வாக்கு’



‘செல்லும்’-‘வாக்கு’

மாற்றுவோமென்று
சிலிர்க்க – வைத்து,
பேசிச் சிரிக்கவைத்து
நம்மையே மாற்றுவர்
நம்மை - ஏமாற்றுவர்.

அவர் தம் காசளித்து
பெற்ற வாக்கினால்
செல்வாக்கடைவர்
நல்வாக்களித்தோரை
செல்லாக்காசாக்கி!

காதினிக்க இவரளிக்கும்
‘வாக்கி’னை நம்பி
வாக்களித்து - வக்கற்று
விக்கித்து  நின்றது
இதுவரை போதும்!

நேர்மையாய் வாக்களித்து
முன்னே(ற) வாருங்கள்!
            து  நாம் நிற்போம்
            ந்
            ர்
           மி
தலை  நி
இனி… இனிமேலாவது!

தாய் நாட்டின்மேல்
என்றும் ‘அழிந்தி’டாத
‘அக்கறை’ படுங்கள்!
தகுதியானவரை சுட்டிட
சுட்டும் விரல் மேல்
அக்’கறை’ படுங்கள்!
ரவிஜி…
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)






8 comments:

  1. தகுதியானவரை சுட்டிட
    சுட்டும் விரல் மேல்
    அக்’கறை’ படுங்கள்!
    >>
    சமூகத்தின்மேல் நான் கொண்ட ”அக்கறையால்” கண்டிப்பாய் என் விரலில் அக்”கறை”ப் படும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்! வரவிற்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  2. இன்றைக்கு பொருத்தமான பகிர்வு - உங்கள் பாணியில்...

    ReplyDelete
  3. தேர்தல் நேரத்தில் தேவையான ஒரு கவிதை. அருமை.

    ReplyDelete